Tuesday, August 3, 2010

சசி தரூரின் வெளியுறவு

இலண்டனில் பிறந்து, துபாயிலும் நியூயார்க்கிலும் வாழ்ந்து திடீரென திருவணந்தபுரம் தொகுதியில் குதித்து நேரடியாக இந்தியாவின் வெளியுறவுத்துறை இணை அமைச்சரான சசி த்ரூர், 18 மாதத்திற்குள் தனது பதவியை இராஜினாமா செய்தார்.

2006ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் நடந்த போது அந்தப் பதிவிக்கு இந்தியா தனது சார்பில் சசி தரூரை முன்னிறுத்தியது.அப்போதுதான் “யார்ரா அது?” என்று இந்தியப் பொதுஜனம் அவரைப் பார்க்கத் தொடங்கியது.

த்ரூர் அந்தப் பதவிக்கு போட்டியிட்ட 7 பேரில் இரண்டாவதாக வந்த போது அவரது சர்வதேச மதிப்பை பற்றியதொரு பிம்பம் இந்திய அரசியலில் உருவானது. தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபையில் சசி, இந்தியாவின் சார்பில் இடம் பெறுவார் என்று யூகிக்கப்பட்டது.

ஆனால் அவர்சரமாய் தரையிறங்கிய அந்நிய நாட்டு விமானம் போல த்ரூர் 2009 ம் ஆண்டின் இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் குதித்தார். நாடுமுழுவதற்குமான தனது வேட்பாளர்களை தேர்வு செய்வதில் வழக்கம் போல தள்ளாடிக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சி, தனது முதல் அறிவிப்பிலேயே தரூரை திருவணந்தபுரம் நாடாளுமன்ற வேட்பாளராக அறிவித்து பத்ரிகையாளர்கள் உட்பட அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. ஏதே ஒரு பெரிய சக்தி தரூரின் பின்னாலிருந்து உந்தித் தள்ளுவதை அனைவரும் உணர்ந்தனர். அதனால் காங்கிரஸை பொதுவாக ஆதரித்த் போதும் சில முஸ்லிம் அமைப்புக்களும் மற்ற சிலரும் தரூரை ஏற்க மறுத்த்தனர்.

சத்தியமாய் நான் இந்தியனில்லை என்று சொல்லும்படியான ஆங்கிலம்- வாழ்க்கை முறை- பழக்க வழக்கங்கள் என்று வாழ்ந்து கொண்டிருந்தவர் திடீரென இந்திய அரசியலுக்குள் ஏன் நுழைந்தார் ? அவரை அழைத்து வந்தது யார்? எதற்காக அழைத்து வரப்பட்டார்? என்பதெல்லாம் கட்ந்த 2009 ம் ஆண்டின் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான கையோடு காணாமல் போய்விட்டது.

தரூர் 99998 வாக்குகளில் வெற்றிபெற்றார். அதைத் தொடர்ந்து நேரடியா இந்தியாவின் மிக மதிப்பு மிக்க வெளியுறவுத்துறை இணை அமைச்சர் பதவியைப் பெற்றார். அவருக்கு கிடைத்து வந்த செல்வாக்கு மர்மாமானதாகவே இருந்தது.

பதவியெற்ற புதிதிலேயே வெளியுறவுத்துறை மூத்த அமைச்சர் கிருஷ்ணாவுக்கும் அவருக்குமே மோதல் எழுந்தது. ஒருவகையாக சசி தரூருக்கு அவரது அதிகாரம் புரிய வைக்கப் பட்டது. பின்னரும் தொடர்ந்து த்ரூரின் மேற்கத்திய சொகுசுக் கலாச்சாரம் சர்ச்சையில் இடம் பிடித்துக் கொண்டே இருந்தது.

இந்தியப் பொதுஜனத்திற்கு, விமானமே இன்னும் ஆகாசத்தில் பறக்கிற அன்னப் பறைவாயகத்தன் இருக்கிறது என்பதை புரியாமல், விமானத்தின் சாதாரண வகுப்பை .த்ரூர், மாட்டுத் தொழுவம் என்றார். ஐந்து நட்சத்திர ஒட்டலை தில்லியில் தான் தங்கும் மேன்ஷனாக மாற்றிக் கொண்டார் இப்படியெல்லாம் தொடர்ந்த சங்கதிகளில் தரூர் வேடந்தாங்களுக்கு வந்த வெளிநாட்டுப் பறவையாகவே மக்களுக்குத் தெரிந்தார். கேராளாவின் காங்கிரஸ்காரகளுக்கு கூட அவர் அவ்வப்போது கதராடை அணிகிற அந்நிய நாட்டு தூதராகவே தோன்றினார்,

என்றாலும் அவரது அறிவு ஜீவி இமேஜும் பெரிய இடங்களில் வேலை பார்த்தவர் என்ற பெருமையும் பத்ரிகையாளர்கள் படித்தவர்கள் மட்டத்தில் அங்கீகரிக்கப் பட்டது. டுவிட்டரில் அவரை பின்தொடர்பவர்கள் அதிகரித்தனர். இனி வருகிற இந்திய அரசியலுக்கு தரூர் தேவைப்படலாம் என்ற எண்ணம் உருவாகி வந்தது. தரூர், வண்ணக் கோடுகள் கொண்ட கதர் துண்டை கழுத்தில் போட்டுக் கொண்டு இந்திய அரசியலில் ஞானஸ்நானம் பெற்றுக் கொண்டார்.

அமெரிக்காவின் பக்கத்துவீட்டுக்காரராக அவரை ஒருவாறு அந்நியப் பார்வை பார்த்து வந்த முஸ்லிம்கள் கூட கடந்த ஆண்டின் ஹஜ் ஏர்பாடுக்ளின் போது சசித்ரூர் காட்டிய வெளிப்படையான செயல்பாடுகளால் மகிழ்ச்சியுற்றிருந்தனர்.

இந்திய மக்களின் இரத்தில் கலந்த கிரிக்கெட் ரசனையை சூதாட்டக்களமாக்கிய ஐ பி எல் கிரிக்கெட்டில் கொச்சி அணியின் வடிவில் வந்த பந்து இந்த கொச்சு சேட்டனின் விக்கெட்டை வீழ்த்தியது.

“இந்தியன் பிரீமியர் லீக்” ஐ பி எல் என்பது இந்தியாவின் கருப்புப் பணத்த காவல் காக்கிற பூதங்களான சாராய சாம்ராட்டுகளும், நிழலான வருமானத்தில் கொழிக்கிற தொழிலதிபர்களும் நடிகர் நடிகைகளும் அரசியல் வாதிகளும் சேர்ந்து நடத்துகிற சூதாட்டக் கிளப்பாகும். நூற்றூக் க்ணக்கான நவீன “தாவூத் இபுறாகீம்”களின் கூட்டுக் கொள்ளை இது என்பது இநிதியாவின் அனைத்து அரசிய்ல வாதிகளுக்கும் தெரியும். என்னும் “முதலாளி”களின் அரசுகளாக் நடந்து கொள்ள வேண்டிய நிர்பந்த்தில் இருக்கிற இந்திய அரசு மாநில அரசுகளே எந்த அக்கிரமத்தையும் கண்டு கொள்ளவிலை.

ஐ பி எல் கிரிக்கெட் போட்டிக்கு புதிதாக கொச்சி அணி தேர்வு செய்யப்பட்ட போது கருப்புபண் பூதங்களுக்கிடையேயான பூசல் வெளிப்பட்டது.

ஒரு புதிய அணியை உருவாக்க ஐ பி எல் திட்டமிட்டது அதை விலைக்கு வாங்கும் போட்டியில் அகமதாபாத்தை தலைமையிடமாக கொண்ட பண முதலைகளும் துபாயை மையகமாக கொண்ட பண முதலைகளும் போட்டியிட்டன. இதில் கொச்சி அணியை உருவக்க நினைத்த Rendezvous Sports World நிறுவனம் அதற்காக சசி தரூரின் உதவியை நாடியது. சசி தரூர் தனது தோழி சுனந்தா மூலம் 70 கோடி ரூபாயை அவர்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்தார். போட்டியில் கொச்சி அணியின் உரிமையாளர்கள் வெற்றி பெற்றனர். சுனந்தாவுக்கு அதற்குரிய பங்கு கொடுக்கப் பட்டது.

இந்தப் போட்டியில் நடுநிலை வகிக்க வேண்டிய ஐ.பி.எல்லிம் சேர்மன் லலித் மோடி அகமதாபாத் பண முதலைகளுக்குச் சாதகமாக இருந்தார். போட்டியில் அவர்கள் தோற்ற போது கொச்சி அணியின் பின்னணி பற்றி அவர் நோண்ட ஆரம்பித்தார். அந்தச் சந்தர்ப்பத்தில் தான் சசி தரூர் அவருடன் தொடர்பு கொண்டு கொச்சி அணியின் உரிமையாளர்கள் விசயத்தை தோண்டித் துருவ வேண்டாம் என்று கேட்டுக்(?) கொண்டார். குறிப்பாக சுனந்தா விசயத்தை ஆராய்ந்து கொண்டிருக்க வேண்டாம் என்று தொலை பேசியில் கூறினார். இந்தத் தொலை பேசி உரையாடலை மோடி மீடியாக்களுக்குத் தெரிவிக்க மீடியாக்கள் ச்சித்ரூரையும் சுனந்தாவையும் சல்லடையாக அலசின.

சசி தரூரின் ஆல்பம் தூசி தட்டி எடுக்கப் பட்டது. சமூக நிகழ்ச்சிகள் பலவ்ற்றிலும் சுனந்தா சசியுடன் அருக்கருகே மிக ச்கஜமாக நின்று கொண்ட்ருந்த புகைப்படங்கள் கிடைத்தன. சுனந்தா தனது நாற்பது வயதிலும் கவர்ச்சியாக இருந்தார். மீடியாக்களுக்கு இது போத்தா?

திலோத்தமா முகர்ஜி’யுடனான தனது முதல் திருமணத்தை முறித்துக் கொண்டு கிறிஸ்டினா ஜைல்ஸ்’ என்ற பெண்ணை 2007 ல் இரண்டாவதாக திருமணம் செய்து அவரிடமிருந்து விலகி வாழ்ந்து வருகிற சசி தரூருடன் சுனந்தாவை ஒரு ரக்சிய காதலி ரேஞ்சுக்கு மீடியாக்கள் இணைத்துப் பேசத் தொடங்கின. தனது தோழிக்காக மத்திய வெளிய்றவுத்துறை இணை அமைச்சர் தனது பதவியை துஷ் பிரயோகம் செய்துவிட்டார் எனறு பொரிந்து தள்ளின.

ஐ பி எல் கிரிக்கெட்டின் விஷேசம் என்னவென்றால் “அழகிகளின் ஆட்டம்” என்றார்கள். (நான் ஐ பி. எல் பார்ப்பதில்லை. ஸ்கோர் கேட்பதில்லை. அதுபற்றிய செய்தியையும் படிப்பதில்லை) அரங்கிற்குள் அழகிகள் எப்படி ஆடுகிறார்களோ தெரியாது அரங்கிறகு வெளியே ஆட்டுவிக்கிற அழகிகள் ந்ன்றாகவே விளையாடுகிறார்கள் என்பது மட்டும் இப்போது நன்றாகப் புரிகிறது.

ஐ,பி எல் கமிஷனர் லலித் மோடி, சசி த்ரூரை தொலை பேசியில் தொடர்பு கொண்டு தனக்கு ‘தற்போது’“வேண்டாத’ஒரு வெளிநாட்டு அழகி இந்தியாவில் அதிக நாள் தங்குவதற்கு அனுமதிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். தரூர் அதை பொருட்படுத்தவில்லை. அந்த அழகிக்கு விசா நீட்டிப்பு கொடுத்ததார். அதனால் கோபமடைந்த மோடி. தனக்கு “வேண்டப்பட்ட” ஒரு அழகிக்காக தரூர் அவரிடம் பேசி”யதை மீடியாக்களுக்கு வெளிப்படுத்தினார் என்று கூறும் செய்தியாளர்கள் “எப்படியோ ஐ.பி. எலில் வீரர்களின் ஆட்டம் மட்டுமல்ல அழகிகளின் ஆட்டமும் சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது” என்று நகைக்கிறார்கள்.

“சுனந்தா புஷ்கர்” சசி த்ரூரின் தோழி. துபாயின் மிகப் பிரபலமான ஷேக் ஜைத் சாலையில் வசிக்கிற அவர் கனடா பாஸ்போர்ட் வைத்திருக்கிறார்

காஷ்மீர் பள்ளத்தாக்கின் சோபூர் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஒரு இராணுவ அதிகாரியின் மகளான சுனந்தா ஐக்கிய அரபு அமீரகத்தின் அரசு நிறுவனமான Tecom என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் டைரக்டராக இருக்கிறார்

சுனந்தா தனது அதிகாரப் பூர்வப் பணியோடு விளம்பர நிறுவனம், டிராவல்ஸ் ஏஜென்ஸி போன்ற பல நிறுவனங்களை துபாயில் நடத்தி வருகிறார். கனடாவின் தலைநகர் டொரோண்டோவில் ஐ டி நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார் என்றும் செய்திகள் கூறுகின்றன. சசிதரூர் சுனந்தாவை டொரோண்டோ தோழி என்றே பல இடங்களிலும் அறிமுகப் படுத்தியயதாக NDTV கூறியது. ( She hasbeen introduced several times as Tharoor's "friend from Canada".)

சில மாதங்களூ முன் காங்கிரஸின் இளம் அமைச்சரான ஜிதின் பிரசாத்தின் திருமணத்திற்குச் சென்ற சசி தரூர் சிகப்பு சாரி அணிந்த கவர்ச்சிகரமான ஒரு பெண்ணுடன் சென்ற போதே அவரை நோக்கி பல தலைகளும் திரும்பிப்பார்த்தன. யார் இவர் என்று கேட்கவைக்கும் அளவு அழகும் அதே அளவு ஈர்க்கும் திறனும் கொண்டவர் தான் சுனந்தா அதற்க்குப் பிறகு மீடியாக்களால் அதிகம் கவனிக்கப்படுகிற பிரமுகர் ஆனார். சுனந்தாவுடன் நெருக்கமாகவே தரூர் பல நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். மிக இயல்பான ஒரு நட்பாகவே தரூர் அதை வெளிப்படுத்தினார். ஆனால் மீடியாக்கள் விடவில்லை.

சசிதரூரின் வெளியுறவு என்று டைம் ஆப் இந்தியா தலைப்பிட்டு சில செய்திகளை எழுதியது. (Shashi Tharoor's 'external affair' -Times of india)

கனடாவைச் சேர்ந்த தனது இரண்டாவது மனைவியான கிறிஸ்டியானாவையும் தரூர் விவாகரத்துச் செய்துவிட்டதகவும் சுனந்தாவை அவர் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் வேறு சிலர் செய்தியைப் பரப்பினர். அமைச்சரின் உதவியாளர்கள் இச்செய்தியை தொடர்ந்து மறுத்த்னர். சுனந்தாவுக்கு வாலிப வயதில் ஒரு மகன் இருப்பதாகவும் இது போன்ற செய்தியையை பரப்பவேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டனர்.

ஆனால் இந்தியா அரசியலில்மட்டுமல்ல உலக் அரசியலில் கூட உறவு முறை தெளிவில்லாத நிலையில் கவர்ச்சிகரமான் ஒரு பெண்ணுடன் தொடர்ந்து காட்சி தருவது செல்லுபடியாகாது என்பதை உலக அரசியல் படித்த சசிதரூருக்கு புரியாமல் போயவிட்டது. தனது செல்வாக்கை பற்றிய துணிச்சசால் அவர் இதயெல்லாம் பொருட்படுத்த தேவையில்லை என்று கருதியிருக்கலாம். அஞ்சுவதஞ்சாமை மடமை என்பது இப்போது சசி தரூருக்குப் புரிந்திருக்கும்.

இதே அதிகார துஷ் பிரயோகம் சுனந்தாவுக்குப் பதில் வேறு ஒரு ஆண் விச்யத்தில் நடந்திருக்குமானால இவ்வளவு கடும் சர்ச்சைகளை தரூர் சந்திக்க மாட்டார். எப்படியோ தரூரின் வெளியுறவு அவரது வெளியுறவுத்துறைப் பதவியைப் பறித்துக் கொண்டு விட்டது.

கிரிகெட் விளையாட்டில் சுழல் பந்து வீச்சு, பேட்ஸ்மேன்களை நிலை குலைய வைக்கும். ஐ. பி. எல் கிரிக்கெட்டில் ஏற்பாட்டாளர்கள் அணிகளின் உரிமையாளர்கள் பணச்சூழலுக்கு பலியாகி இணையமைச்சர் சசி த்ரூர் இப்போது மன உளைச்சல் சசி தரூராகி இருக்கிறார்.

இப்போது பிரச்சினை தரூரிலிருந்து விலகி ஜரூராக வேறு திசையில் சென்று கொண்டிருக்கிறது. ஐ பி எல் லின் மூச்சுக்காற்றெங்கும் பரவி இருக்கிற முறைகேடுகள் ஒவ்வொன்றாக இப்போது வெளிவரத் தொடங்கியிருக்கிறது இதுவரை நட்ப்பதை எல்லாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு உம்மென்று இருந்து விட்டு மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இப்போதுதான் ஐ பி எல் என்றால் என்ன கேள்விப்படுவர் போல ஐ பி எல் லின் அனைத்து நடவடிக்கைகளும் சோதிக்கப்படும் என்று கூறுயிருக்கிறார்.

அடெங்கொப்புறானுகளே! இத்தனை நாளா என்னவெல்லாமோ நடக்குது நாட்டிலே! கோடியாய் கள்ளப் பணம் புரளுது விளையாட்டிலே! உலகமே குலுங்குது அழகிகளின் ஆட்டத்திலே! சூறாவளியே வீசுது “பெட்”டிலே! தமிழ் சினாமாவில் கடைசியில் வருகிற இன்ஸ்பெக்டர் போல் தப்பாக துப்பாக்கி சுட்டுக் கொண்டு வருகிறார் பிரணாப்ஜி!

விளயாட்டின் மீதும் நாட்டின் பொருளாதாரத்தின் மீதும் உண்மையான அக்கறை இருக்குமானால் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளுக்கு அரசு உடனே தடைவிதிக்க வெண்டும்

நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சிகள் வைத்த முக்கிய கோரிக்கையே இந்த விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்பது தான். கம்யூனிஸ்ட் கட்சியின் குருதாஸ் குப்தாவும், லல்லுப் பிரசாத யாதவும் முலாயம் சிங்க் யாதவும் மிக அக்கறையோடும் ஆவேசத் தோடும் நாடாளுமன்றத்தில் இந்தப் பிரச்சினையை எடுத்து வைத்தனர். மக்களை ஏமாற்றத் தெரிந்த காங்கிரஸ் கட்சி மக்கள்வையயும் ஏமாற்றியது. முறைகேடுகள் விசாரிக்கப் படும் என்று சொல்லி போக்குக் காட்டி விட்டது.

இதுவிசயத்தில் காங்கிரஸைப் போலவே பாரதீய ஜனதாவும் நாடகமே ஆடியது. சசி தரூர் இராஜினாமா செய்தி வெளியான அந்த நள்ளிரவில் இது உண்மைக்கு கிடைத்த வெற்றி என்று பாரதீய ஜனதா கூறியது. உண்மையில் காங்கிரஸை சங்கடத்தில் சிக்க வைத்த பாரதிய ஜனதாவுக்கு கிடைத்த வெற்றி என்றுதான் இதைச் சொல்லவேண்டும். பாரதீய ஜனதா உண்மைய விரும்பி இருக்குமானால் ஐ பி எல்லை தடை செய்யும்படி தான் சொல்லியிருக்க வேண்டும். ஆனால் பாரதீய ஜனதா ஐ.பி.எல் விசய்த்தில் மூச்சுவிடவில்லை. பாரதீய ஜனதா மட்டுமல்ல பெங்களூருவில் புத்தாண்டுக் கொண்டாட்டங்களை அடித்து நொருக்கிய “இந்துதுதுவ தாலிபான்கள்” ஐ.பி.எல்லின் அழகிகளின் ஆட்டத்திற்கு எந்த வகையிலும் தொல்லை தர வில்லை. முதலாளிகளை பகைத்துக் கொள்ளக் கூடாதல்லவா?

பாவம் சசி த்ரூர்! இந்தப் பிரச்சினையில் முதன்மையாக வெளிப்பட்டது காங்கிரஸ் கட்சிக்குள் அவருக் கேற்பட்ட தனிமையே! மனிதர் தனது சர்வதேச இமேஜுக்கும் சரிந்து வருகிற இமேஜுக்குமிடையே அழகான ஆங்கிலத்தில் நன்றாகவே தடுமாறினார். ஒரு கேரளீயனாக கொச்சி அணி உருவாக உதவியதை தவிர தனக்கு இதில் எந்த லாபமும் இல்லை என்று அழுத்தமாகவே கூறினார். ஆனால் தனது வெளியுறவு நடவடிக்கையில் சுனந்தா புஷ்கருக்கு இடமளித்த விசயத்தில் மனிதர் நாகரிகப் பூச்சுக்கும் கலாச்சார வீச்சுக்குமிடையே வழி புரியாமல் தள்ளாடினார்.

இந்திய அரசியலில் திடீர்ப் பிரவேசங்களும் திடீர் வனவாசங்களும் ச்கஜம் தான் என்றாலும் உள்ளிருந்து காலை வாரிவிடும் காங்கிரஸ் கட்சியின் குணமும், பிர்ச்சினைகளை எதிர்கொள்ளத் திராணியற்ற அதன் இயல்பும், அதற்காக தங்களவர்களையே காவு கொடுத்துவிடும் அதன் உயர்தரப்பண்பும் சசி தரூருக்குப் புதிய பாடங்களை கற்றுத்த தந்திருக்கும்.

ஆனால் அவருக்கு ஏற்பட்ட பாதிப்பை இந்தியாவின் ஜனநாயக அமைப்புக்கு ஏற்பட்ட பாதிப்புத்தான் பெரியது என்பதை இந்தியப் பொது ஜனத்திற்குப் புரிய வேண்டும். .

எதிர்க்க்ட்சிகளின் நாடாளுமன்ற ஆர்ப்பாட்டங்களையும், மீடியாக்களின் மிரட்டல்களையும் எதிர்கொள்ளும் திராணி சோனியாவின் சகாக்களுக்கு இல்லை என்பதுதான் இந்தப் பிரச்சினையில் இரண்டாவதாக வெளிப்பட்ட உண்மை.

அமைச்சரவை செல்வாக்கு துஷ்பிரயோகம் செய்யப்பட்டதை கண்டு துடிதுடித்துப் போய்விட்டது போல நடிக்கிற காங்கிரஸ் கட்சி இந்தியாவின் மிக முக்கியமான ஒரு துறையின் பொறுப்புக்கு அது நியமித்திருந்த ஒருவரை இவ்வளவு விரைவாக வீட்டுக்கு அனுப்பி விட்டதில் தனது செல்வாக்கு அடிவாங்குவதை யோசித்துப் பார்க்கவில்லை.

திடீரென் அரசியலுக்கு வரும் ஒருவர் உடனடியாக மத்திய வெளியுறவுத்துறையின் இணையமைச்சராகிறார், தொடர்ந்து அவர் மீடியாக்களில் வெளியான ஒரு குற்றச் சாட்டில் இராஜினாமா செய்யும்படி நிர்பந்திக்க்படிகிறார் என்பது இந்திய ஜனநயகத்திற்கு எந்த அளவு வலுவூட்டக் கூடியது என்பதை காங்கிரஸ் கட்சி யோசிக்கவே இல்லை.

“தரூர் மீதான குற்றச் சாட்டு குறித்து விசாரிக்கப் படும், விசாரணை முடியும் வரை தரூர் இலாகா இல்லாத அமைச்சராக இருப்பார் என்றோ, அல்லது விசாரனைக்குப்பின் தரூர் மீது குற்றம் இல்லை என்றால் அவர் மீண்டும் அமைச்சராக நியமிக்கப்படுவார் என்றோ காங்கிரஸ் கூறியிருக்குமென்றால் அதுவே ஒரு வலிமையான அரசாங்கத்தின் அடையாளமாக இருந்திருக்கும்.

கார்கில் போரின் போது நடை பெற்ற சவ்ப் பெட்டி ஊழலில் குற்றம் சாட்டப்பட்ட ஜார்ஜ் பெர்னாண்டஸை காப்பாற்றுவதில் பாரதீய ஜனதா காட்டிய தீவிரம், ஏன் ஸ்பெக்ட்ரம் ஊழலில் குற்றம் சாட்டப்பட்ட மத்திய அமைச்சர் ராஜா வை காப்பற்றுவதில் காங்கிரஸின் கூட்டாளி தி.மு,க காட்டிய் அக்கறை ஆகியவறை எண்ணிப்பார்த்துச் செயலப்ட காங்கிரஸ் தவறிவிட்டது

சசி தரூரை வேகவேகமாக இராஜினாமா செய்ய வைத்த அதே வேகத்தில் அவர் மீது குற்றம் எதுவுமில்லை என்று காங்கிரஸ் கூறியது. இதவிட கேணத்தனமான அரசியல் வேறெதுவும் இருக்க முடியாது. தரூர் மீது குற்றமில்லை என்றால் அவரை இராஜினாமா செய்ய் வைத்தது ஏன்? என்ற அத்வானியின் கேள்விக்கு பதில் சொல்ல காங்கிரஸ் க்டசி கடமைப் பட்டிருக்கிறது. அது அதவனியின் கேள்வி மட்டுமல்ல அரசிய்லின் மீது அக்கறையுள்ள அனைவரின் கேள்வியுமாகும்.

இந்தியாவின் அமெரிக்க விவகார அமைச்சராகவும் அவ்வப் போது பிரதம அமைச்சராகவும் இருக்கிற டாக்டர் மன்மோகன் சிங் விமானத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் சசி தரூர் விச்யத்தில் கருத்துச் சொல்லும் போது “அரசியலில் ஏற்றத்தாழ்வுகள் சகஜமே” என்று சொன்னது காங்கிரஸ் அரசின் அரசியல் பலகீனமே!
எதே ஒரு நிர்பந்த்தத்திற்காக தரூரை நியமித்து விட்டு அவரை வெளியேற்ற எப்போதடா சந்தர்ப்பம் கிடைக்கும் என்று காத்திருந்தது போலத் தான் இருந்தது அவரது அந்தப் பேச்சு.

அமைச்சரகச் செல்வாக்கை முறைகேடாகப் பயன்படுத்துவதென்பது இந்தியாவில் இயல்பான ஒன்று என்பது யாருக்கும் தெரியாததல்ல். புதிதாக வந்த ஒருவரை திடீரென வெளியுறவுத்துறை அமைச்சர் என்னும் அளவுக்கு உயர்த்துவானேன்? அவரை சந்தடி சாக்கில் கவிழ்த்துவிடுவானேன்? என்ற கேள்விக்கு மக்களிடம் பதில் சொல்ல காங்கிரஸ் கட்சியிடம் யொக்கியமான எந்த பதிலும் இல்லை

சசித்ரூரின் விசயத்திற்கு முழுமையாக பொறூப்பேற்க கடமைப் பட்டவர் சோனியா காந்தியே! காரணம் அவரை முன்மொழிந்தவரும் அவர் தான். வழியனுப்பியவரும் அவர் தான்.

No comments:

Post a Comment