Tuesday, October 19, 2010

வஹாபிஸ தீவிரவாதம்

“திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே திருவிடைச்சேரியில் உள்ள மஸ்ஜித் மினா பள்ளி வாசலில் தமிழ்நாடு தவஹீத் ஜமாத் அமைப்பை சேர்ந்த குண்டர்கள் துப்பாக்கியால் சுட்ட்தில் ஜமாத் பொறுப்பாளர்கள் இருவர் மரணம்” என்ற செய்தி இந்த ஆண்டு ரமலான் மாத்த்தில் தமிழக மக்களை அதிர்ச்சியில் உரைய வைத்தது.

திட்டமிட்டு இத்தாக்குதலில் ஈடுபட்ட கொடியவர்களில் ஒருவன் கண்மூடித்தனமாக சுட்ட்தில் இரண்டு பேர் பலியாகினர். மூன்று ஹிந்துக்கள் உட்பட நான்கு பேர் ப்டுகாயம்டைந்த்துள்ளனர். தற்போது அவர்களில் மூன்று பேரின் உடல் நிலை ஓரளவு தேறிவிட்ட்து எனினும் பால்ராஜ் எனும் ஒருவர் இன்னும் மருத்துவ மனையில் இருக்கிறார். திருவிடைச்சேரி எனும் சுமார் 200 குடும்பங்களைக் கொண்ட சிற்றூர் இன்னும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளமுடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது.

தராவீஹ் தொழுகைகைப்பின் கூடியமர்ந்து ஒரு ஜுஸ்வு (சிறு பகுதி) குர்ஆன் ஒதும் பழக்கம் உடைய அந்த ஊர் மக்களுக்கு செப்டம்பர் 5 ம் தேதி இரவு கெட்ட கனவாக அல்ல மிக்க் கெட்ட நனவாக மாறிப்போனது. தவ்ஹீதியப் போவையில் வேத்த்தை கையிலேந்தியிருப்பதாக கூறும் சாத்தான்கள் உண்மையில் தங்களது கைகளில் என்ன வைத்திருக்கிறார்கள் என்பதை உணராத அவர்கள் தங்களது இன்னுயிர் இரண்டை பறிகொடுத்தனர்.

குண்ட்டி பட்டு ஷஹீதான ஒருவரின் உறவினரிடம் தொடர்பு கொண்ட போது ஊருக்குள் என்ன நிலைமை என்று அறிந்து கொள்ளக் கூட இன்னும் தாங்கள தயாராகவில்லை என்று தழுதழுத்தார். சமீபத்திய தமிழக வரலாற்றில் இப்படி ஒரு கொடுமை ஒரு நல்ல நாளில் நிகழ்ந்து நான் அறியவில்லை என்கிறார் ஒரு முதியவர்.

மகிமை மிக்க லைலத்துல் கத்ர் இரவை வரவேற்கும் மக்ழிச்சியில் திழைத்திருந்த தமிழக முஸ்லிம்களை ஆழிய சோகத்திற்குள் தள்ளியது இந்தச் செய்தி. பெண்கள் சிறுவர்கள் உட்பட அனைவரும் நடைபெற்ற அக்கிரம்த்தை கண்டு பெரிதும் அதிர்ச்சிய்டைந்தனர். சுன்னத் ஜ்மாத்தோடு கருத்துவேறுபாடு கொண்ட அமைப்பினர் கூட தவ்ஹீத் ஜமாத்தின் காட்டுமிராண்டித்தனத்தை வீதிகளில் கடுமையாக விமர்ச்சித்த்தையும் அவர்கள் இவ்வாறு செய்யக் கூடியவகள் தான் என்று பேசிக்கொண்ட்தையும் பரவலாக காண முடிந்த்து.

திரு பிஜே வின் பிரவேசத்தின விளைவாக தமிழக்ம் சந்தித்த் கொடூரங்களில் ஒரு உச்சபட்ச பாதிப்பாக கருதப்படுகிற இந்த கொலைவெறித் தாக்க்குதல் தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்பின் தீவிரவாதப் போக்கின் ஒரு சிறு பொறிதான் என்றும் தமிழகம் தோறும் இவ்வமைப்பினர் இவ்வாறே மூளைச் சலவைச் செய்து தாயார்படுத்தப் பட்டுள்ளனர் என்றும் கசிகின்ற தகவல்கள் தமிழக் முஸ்லிம்களை பெரிதும் சலனத்திற்குள்ளாக்கி உள்ளது.

தமிழ்கத்தில் இத்தகைய படு மோசமாமான பிரச்சினையை உண்டு பண்ணுகிற அமைப்பினரை அழைத்துச் சென்று பிரதமரைச் சந்திக்க வைத்த காங்கிரஸ் பிரமுகரும், சோனியாவுக்கு நெருங்கியவருமான ஹஜ் கமிட்டித் தலைவர் ஜே எம் ஹாரூன், தேசிய லீக் தலைவர் பஷீர் ஆகியோரும் இது விசயத்தில் சமுதாயத்திற்கு பதில அளிக்க கடமைப் பட்டவர்களே! அரசியல் லாபத்திற்காக அற்பமானபவர்களை தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடும் துர்பாக்கியம் இவர்களுக்கு ஏன் ஏற்பட்ட்து என்பது புரியாத புதிரே!

எந்ங்க ஆளுக்கு பிரைம் மினிஸ்டர் வரை செல்வாக்கு இருக்கிறது என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தை சார்ந்த அமைப்பினர் சமீபகாலத்தில் மார்தட்டிக் கொள்ளத் தொடங்கிர்யிருந்தனர். அவர்களுக்கு கிடைத்த அந்த தவறான அஙகீகாரம் கூட அவ்வமைப்பினர் இத்தகைய படு பாதகமான கொலைகளை செய்யும் துணிச்சலை தந்திருக்கலாம் என்று குடவசலைச் சாந்த ஒரு பிரமுகர் கூறினார்.

இந்தப் பிரச்சினையில் எங்களுக்கு எந்த தொட்ர்பும் இல்லை என்று திரு பிஜே வெளியிட்ட அறிக்கை அப்பன் குதிருக்குள் இல்லை என்பதைப் போன்றதே! சம்பந்தம் இல்லை என்றால் ஒற்றை வரி போதுமானது. அல்லாஹ்வுக்கு எதிராக பொய்சொல்லிப் பழகியவர்களுக்கு ஆட்சியாளர்களையும் காவல்துறையினரையும் சரிக்கட்ட பொய் சொல்வது ஒரு பெரிய விசய்மே அல்ல. அவர் இது போன்ற குற்றச் செயல்கள் பலவற்றிற்கும் பின்னணியில் இருந்திருக்கிறார் என்று அவரது முன்னாள் அபிமானிகளே குற்றம் சாட்டுகிறார்கள்.

துப்பாக்கிச் சூட்டைவிட பிஜே வின அறிக்கை தனக்கு அதிகம் அதிர்ச்சியை தந்த்த்தாக அவருடன் நீண்ட கால தொடர்பில் இருந்த ஒருவர் கூறினார். பிஜே தனக்கென உருவாக்கியிருந்த ஒரு மெய்க்காவலர் படை பற்றிய தகவலகளை தமிழக காவல் துறை ஆராய வேண்டும் என்று அவர் கூறிய போது பிஜே என்பவருக்குப் பின்னேயும் அவரது அமைப்புக்குப் பின்னேயும் அணிவகுத்து நிற்கிற மர்மங்களைப் பற்றிய அச்சம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்ல.

பொதுவாக தூய்மைவாதம் பேசிய அமைப்புக்கள் பலவும் மார்க்கத்திற்கும் பக்திக்கும் தொடர்பில்லாத சண்டித்தனம் செய்கிற இளைஞர்களை வைத்துக் கொண்டு, சமூக மரியாதையோடு எதற்கும் தயங்கித் தயங்கிச் செயல்படுகிற ஜமாத் அமைப்புக்களுகும் அந்த ஜமாத்தை அணுகி வாழும் முஸ்லிம் மக்களுக்கும் எதிராக பல அராஜகங்களை செய்துவருவது அனைவரும் அறிந்த்தே!

தொழுகை அல்லது சொற்பொழிவு என்ற பெய்ரில் 10 பேர் இருபது பேர் மட்டுமே கூடக் கூடிய இடங்களில் ஆயிரம் பேருக்கு கேட்கிற மாதிரி ஒலி பெருக்கிகளை வைத்துக் கொள்வது இவர்களது கலாச்சாரம். பொது மைக் விதிக்கு அரசு அனுமதித்திருக்கிற டெஸிபிள்ளை எகிரிகுதிக்கிற அளவில் வைத்துக் கொண்டு தீனை (?) பயங்கரமாக பரப்புகிற இந்த நடைமுறை தமிழகத்தின் அனைத்துப் பகுதியிலும் நடக்கிற கொடுமை. இந்த நாசமாய போன்வன்களிடம் என்னத்தை பேசுவது? எனற விரக்தியிலேயே இவர்களது இடங்களுக்கு அருகில் இருக்கிற மக்கள் பேசா மடந்தைகளாக இருந்து விடுகிறார்கள். தேர்வுக்கு படிக்கிற மாணவர்கள், உடல் ந்லமில்லாதவர்கள் ஏன் வீடுகளில் உட்கார்ந்து குரான் ஒதுபவர்களுக்கு கூட பெரும் தொல்லையாக இவர்களது நடவ்டிக்கைகள் அமைந்திருப்பதை இவர்களது வழிபாட்டுக் கூடங்கள் அமைந்துள்ள பகுதிக்கு அருகே வசிப்பவர்கள் அறிவார்கள். ஊரே அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கிற நேரத்தில் அதிக சப்த்த்தில் மைக் போட்டு பிரச்சாரம் செய்கிற அழகை(?)ப் பார்த்தால் எந்த வகை கிறுக்க்ன்கள் இவர்கள் என்றுதான் எண்ணத் தோன்றும். தீவிரவாத்த்தின் இன்னொருவகையான வெளிப்பாடாகத்தான் இதை கருத வேண்டும். ரம்லான் வந்து விட்டால் இந்தக் கிறுக்குத்தனக்கு இன்னும் வலிமை கூடிவிடும்.

திருவிடைச் சேரியி 12 13 அடிகளே கொண்ட பாதையின் ஒரு மூளையில் ஒரு வீட்டில் சுமார் 15 முதல் இருபது பேர் மட்டுமே கூடக்கூடிய இட்த்தில் தனியாக கூட்த்தொடங்கிய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினர் வழக்கப் படி ஒலி பெருக்கிகளை அலற விட்டுள்ளனர். அக்பரின் தீனே இலாஹி போல இவர்கள் புதிதாக வடிவமைத்துக் கொண்ட சம்யத்தின் படி ரமலானின் கடைசி பத்து நாட்களில் இரவு நடுநிசிக்கு மேல் கத்திக் கூப்பாடு போட்டுள்ளனர். அது அந்தப் பகுதி மக்களுக்கு பெரிதும் இடையூறாகியிருக்கிறது. என்வே அவர்கள் இவர்களுக்கு இடமளித்து உற்சாகப் படுத்தி வருகிற ரோஸ் பாப்பா என்ற கமருன்னிஸா என்ற பெண்மணியிடம் இது குறித்து கேள்வியெழுப்பியுள்ளனர். அந்தப் பெண் தங்களுடைய ஆட்களுக்கு செய்தி அனுப்பியிருக்கிறார். அவர்கள் திரண்டுள்ளனர். பிரச்சினை பெரிதாகி இருக்கிறது

தராவீஹ் தொழுகைக்குப் பிறகு பள்ளிவாசலில் பிரச்சினையை பேசித்திர்த்துக் கொள்ள முடிவாகியிருக்கிறது. எப்போதுமே இந்த அமைப்பினர் ஒர் கூட்டமாக சகல் விதமான தயாரிப்புகளுடன் மேலிட்த்தின் ஆலோசனையின் படி மேலிட்த்தின் உடனடியான உதவியை ஏற்பாடு செய்து கொண்டு வருவதுதான் வழக்கம் அதனால் இவர்களுடன் பேசுவதென்றாலே தங்களைச் சுற்றியும் ஒரு கூட்ட்த்தை திர்ட்டிவைத்துக் கொள்வதை சுன்னத் ஜமாத்தை சார்ந்தவர்கள் பழகியிருக்கிறார்கள். ஆனால் இத்தகைய பிரச்சினைக்கு அனுபவமில்லாத திருவிடைச் சேரி ஜமாத்தார்கள் மக்கள் உறங்கச் சென்றுவிட்ட நேரத்தில் இவர்களை சந்தித்துள்ளனர்.

அந்த இட்த்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பள்ளி வாசலின் முக்கிய நபர்களில் ஒருவரான குத்புதீன் என்பவரால் அழைத்து வரப்பட்ட குண்டர்களிடம் துப்பாக்கி போன்ற பயங்கர ஆயுதங்கள் இருக்கும் என்று திருவிடைச் சேரி மக்கள் கனவிலும் நினைத்திருக்க வில்லை. துப்பாக்கி வைத்திருந்த ஹஜ் முஹம்மது என்பவன் பள்ளிவாசல் தலைவர் முஹம்மது இஸ்மாயில் வய்து (53) நோக்கி திடீரென துப்பாக்கியால் சுட்ட்டிருக்கிறான். அவனுக்கு அருகே நின்று கொண்டு ஒரு ஆள் இவன் தான் சுடு என்று ஆட்காட்டியதாகவும் ஊர்மக்கள் சொல்கிறார்கள். இந்தக் கொடுமைமையை கண்டு பதைத்து என்ன செய்வெதென்றூ தெரியாமல் பள்ளிவாசல் மைக்கில் செய்தியை தெரிவித்து மக்களை உஷார்படுத்தி விட்டு வந்த ஹஜ் முஹம்மது என்பவரையும் துப்பாக்கியால் சுட்டிருக்கிறான், அதற்கு பிறகு அந்தப் பக்கமாக நடந்து சென்றவர்கள் மீது சுட்டிருக்கிறான். இதில் 3 இந்துக்கள் உட்பட நான்கு பேர் துப்பாக்கி காயம் பட்டிருக்கிறது.முஹம்மது இஸ்மாயீலும் ஹஜ்முஹம்மதும் ஷஹீதாகிவிட்டனர்.

என்ன நடக்கிறது என்று யூகிப்பதற்குள் திட்டமிட்டபடி தாக்குதல் நட்த்தியவர்கள் தப்பியோடிவிட்டனர்,

தமிழக முஸ்லிம்களை கதி கலங்க வைத்த இந்த நிகழ்ச்சி தவ்ஹீத் ஜமாத்தின் திட்டமிட்ட ஒரு நடவடிக்கையே என்றும் சுன்னத் ஜமாத் நிர்வாகத்தினரை மிர்ராட்டிப் பணிய வைக்கும் ஒரு அரசியல் லாபம் தேடுகிற முயற்சி என்றும். இனி சுன்னத் ஜமாத்தினர் தவ்ஹீத ஜமாத்தினரைக் கண்டால் பதுங்கிக்கொள்வார்கள் என்ற குறுக்கு யோசனியே இது என்றும் விவரமறிந்த சிலர் கூறுகிறார்கள்,

பொதுவாக இந்த அமைப்பினர் அவர்களது தலைமையிடம் பேசி ஆலோச்னை செய்த பிறகே இத்தகைய நடவடிக்கையில் ஈடுபடுவது பழக்கம் என்றும் இவர்களைப் பற்றி அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

திருவாளர் பிஜே வின் வெளக்கெண்ணய் விளக்கம் இந்தச் செய்தியை உறுதிப் படுத்துகிற வித்த்தில் அமைந்திருப்பதோடு திருவிடைச்சேரி மக்களை பெரிதும் உஷனப் படுத்தவும் செய்திருக்கிறது.

திரு பிஜே முத்தவல்லிகள் உள்ளிட்ட பள்ளி வாசல நிர்வாகிகளை அராஜ்கப் பேர்வழிகள் என்று பேசுவதே இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்க்கும் அவருக்கும் இடையே உள்ள பினைப்பை பறை சாற்றுவதாக அவர்கள் கூறுகின்றனர்.

“இந்த ரமலான் மாதம் முழுக்க அந்த தறுதலைப் பயலுக பள்ளிவாசல் கஞ்சியத்தான் வாங்கிக் குடிச்சிட்டிருந்தானுங்க! அவனுங்க 10 பேருக்காக இரண்டு தூக்கு கஞ்சி பள்ளிசாலில் இருந்துதான் போச்சு. நாங்களா அராஜகப் பேர்வழிகள். என்று பெருமுகின்றனர் அவர்கள்.

தனிப்பட்ட குடும்ப்ப் பிரச்சினை என்றெல்லாம் அந்த அமைப்பினர் கதை கட்டுகின்றனர். அதற்கு பள்ளிவாசலுக்கு வந்து சுடுவானேன்? பள்ளிவாசலுக்கு நாற்பது ஐம்பது பேரை அழைத்து வர வேண்டிய அவசியம் என்ன? முத்தவல்லிகளைப் பற்றி கரித்துக் கொட்ட வேண்டிய அவசியம் என்ன வ்ந்த்து? என்ற்ம் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இந்தப் பிரச்சினைக்கு மூல காரணமாக தனது கொள்கை கூட்டாளிகளை அழைத்து வந்த குத்புதீன் எனபவர் தங்களது அமைப்பை சேர்ந்தவர் அல்ல என்ற ஒரு போர்ஜரி வேலையை அந்த அமைப்பு செய்கிறது. ஆனால் , ஊர்வாசிகளோ தவ்ஹீத் ஜமாத்தின் கூடம் அமைந்த அந்த இட்த்தின் வாசலில் அவர்களுக்கு நிதி வழங்குகிற நபர்களின் பெயர்ப் பட்டியலில் குத்புதீன் என்பவனின் பெய்ர் பதிவாகி இருப்பதை ஆதாரப் பூர்வமாக எடுத்து வைத்துள்ளனர்.

இவனுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை என்று திரு பிஜே வோ, அவரது அமைப்போ சொல்லுமெனில் இவன் அவர்களது ரக்சியக் கருவி என்றுதான் சொல்ல வேண்டும். அவ்வளவு தூரம் அந்த அமைப்புக்காக தீவிரமாக வேலை செய்தவன் அவன் என்கின்றனர் ஊர் வாசிகள்.

சுமார் 27 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர், முக்கியக் குற்றவாளி ஹஜ் முஹம்மது வின் வீட்டிலிருந்து மேலும் ஆயுதங்கள் கைப்ப்பற்றப் பட்டுள்ளன. அவன் சிதம்பரம் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளான. முஜீபுர் ரஹ்மான் என்பவன் இன்னும் தலை மறைவாக இருப்பதாக தெரிகிறது. அவ்ரது அமைப்பைச் சார்தவர்கள் அவனுக்கு அடைக்கலம் கொடுத்திருக்க்க் கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்தப் பிரச்சினையின் துவக்கமாக அமைந்த ரோஸ் பாப்பா என்ற பெண்மணி கைது செய்யப் படவில்லை. அவர் ஒரு பெண் என்பதால் தாங்கள் அவர் மீது குற்ற்ம சாட்டவில்லை என்கின்றன அந்த அப்பாவி மக்கள்.

பிரச்சினை நடந்த்தை அறிந்தவுடன் முஸ்லிம் கட்சிகள் அமைப்புக்கள் பலவும் விரைந்து வந்து நிகழ்ச்சிநடந்த இட்த்தை பார்வையிட்டுள்ளனர். ஆயினும் நிவாரணம் எதுவும் இதுவரை பாதிக்கப் பட்டவர்களுக்கு வழங்கப் படவில்லை. தமிழ அரசு அல்லது ஆளும் கட்சியின் சார்பாக இத்தாக்குதலுக்கு கண்டம எதுவும் தெரிவிக்கப் படவில்லை என்று ஊர்ப்பிரமுகர் ஒருவர் கூறினார்.

தமிழக முஸ்லிம் சம்தாயம் சந்தித்திராத இந்தக் கொடூரச் செயலுக்குப் பின்னால் உள்ளவர்களை தமிழக காவல்துறை கண்டறிய வேண்டும் என்று தமிழக முஸ்லிம்கள் எதிர்பார்க்கிறார்கள்’

உலகம் முழுவதிலும் பரவிவருகிற வஹாபிஸ் போலி தவ்ஹீதிய தீவிரவாத்தின் வேர் தமிழகத்திலும் வேர்கொண்டுள்ளதின் அதிர்ச்சிகரமான முதல் அடையாளமா இது? திருவிடைச் சேரி முதல் குறியா? என்ற சந்தேகம் பலருக்கும் அழுத்தமாக எழுந்துள்ளது.

ஸ்டாலினுடன் நெருக்கம், ஐஜியுடன் பேசுகிறோம், என்றெல்லாம் தவ்ஹீதி அமைப்பினர் நட்த்துகிற அலம்பல்களை கண்டு காவல் துறை கண்ணை மூடிக் கொண்டிருந்து விடக் கூடாது என்பதும் அனுபவஸ்தர்கள் பலரும் கூறினர்..

இது விசய்த்தில் சுன்னத் ஜமாத் அமைப்புக்கள் தங்களது ஒற்றுமையான ஆதரவை திருவிடச்சேரி முஸ்லிம்க்களுக்கு வ்ழங்க வேண்டும். தமிழ்கத்தில் உள்ள ஜமாத்துகள் சுன்னத் ஜமாத் அமைப்புக்கள் அணி திரண்டு போராடாவிட்டால் தங்களது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி குற்றவாளிகள் விரைவாக வெளியே வந்து விடுகிற வாய்ப்பு இருக்கிறது.

இத்தகைய வ்ன் செய்லுக்கு காரணமாக அமைந்த திரு பிஜே விடமிருந்து விலகி நிற்குமாறு திருநெல்வேலி ஆலிம்கள் அரசியல் கட்சிகளிடம் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் கிடைக்கிறது. அது சரியான சந்தர்பத்தில் மேற்கொள்ளப் பட்ட சரியான முடிவாகும்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்புடன் கூட்டணி வைத்துக் கொள்பவர்களுக்கு ஓட்டுப் போட மாட்டோம் என்ற உறுதியான முடிவுக்கு தமிழக முஸ்லிம்களை கோருவது என்று மாநிலம் முழுவதிலும் உள்ள மற்ற ஆலிம்களும் சமுதாயப் பிரமுகர்களும் அணிதிரண்டு வருகிறார்கள.

திரு பிஜே மற்றும் அவரது அமைப்பினரின் அதிகப்பட்ச எல்லை மீறுதல் காரணமாக அவர்களை முஸ்லிம் சமுதாயத்திடமிருந்து தனிமைப் படுத்திக்காட்டியாக வேண்டும் இல்லை எனில் இத்தீயசக்திகளால் சமுத்யாயம் இன்னும் அதிகப் பிரச்சினைகளை சந்திக்க வேண்டியதாகிவிடும் என்ற தீர்மாணத்திற்கு தமிழக ஆலிம்கள் தயாராகிவருகின்றனர். காதியானிகளைப் போல முஸ்லிம்களின் மையவாடிகளில் அடக்க்ம் செய்யப்பட இவ்வமைப்பினர் தகுதி உடையவர்கள் அல்ல என்னும் அளவுக்கு ஒரு உறுதியான முடிவுக்கு அவர்கள் வந்தால் மட்டுமே இந்த விசமிகளை தனிமைப் ப்டுத்த்துவது சாத்தியமாகும். காதியானிகளை விடவும் கடுமையாக இவர்கள் இஸ்லாமின் எல்லைகலை மீறியுள்ளனர். ஜகாத் விசயம் ஒன்றே இவர்களது சமயப் பிறழ்தலுக்கு போதுமான சான்று. ஜகாத் விசயத்தில் இவர்களின் நிலைப்பாட்டிற்கு பிறகு தமிழகத்தில் உள்ள அரபிக்கல்லூரிகளும் ஆலிம் அமைப்புக்களும் இத்தனை காலம் எப்படி இவர்களைப் பற்றி முஸ்லிம் சமுதயாத்திற்கு எச்சரிக்கை செய்யாமல் இருந்தார்கள் என்பது ஆச்சரியமானதே!

“அய்ன அபாக்கர்” (ஜகாத்தை தர மறுத்து மதம்மாறிய முர்த்த்களுக்கு எதிராக தீரத்துடன் போராடிய கலீபா அபூபாக்கர் எங்கே?) என்று அபுல் ஹசன் அலி நத்வி எழுதிய புத்தகம் தான் இது பற்றி யோசிக்கிற போது என் நினைவில் வரும்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்புக்கு எதிராக இத்தகைய உறுதியான நிலைப் பாட்டை தமிழக முஸ்லிம்களும் அவர்களுக்கு வழிகாட்டும் சில முக்கிய பிரமுகர்களும் எடுத்து விட்டால், இவ்வமைப்புடன் கூட்டணி வைத்துக் கொண்டு தமிழக்த்தை ஆள நினைப்பவர்களுக்கு அது அபாயச் சங்குதான்.

தமிழக அரசிய்ல் கட்சிகளில் ஏதாகிலும் ஒன்று இவர்களை அரவணைக்கும் எனில் அது தமிழகத்தின அமைதிக்கு அபாயச் சங்காக ஆக்க்கூடும்.