Saturday, August 1, 2009

தமிழக வக்போர்டுக்கு புதிய தலைவர் :முதல் கோணல்...

தமிழக வக்போர்டின் புதிய தலைவராக கவிக்கோ அப்துல் ரஹ்மன் 10.6.2009 அன்று நியமிக்கப் பட்டிருக்கிறார்.
“பால் வீதி” கவிதை நுல் வழியாக வீச்சு மிகுந்த கவிஞராக வெளிப்பட்டு பன்முகத்தன்மை கொண்ட வசீகரமான உரைத் தொகுப்புக்கள் பிற கவிதை நூல்கள் ஏராளமான கவியரங்குகள், வழியாக பிரபலமடைந்து தமிழ் இலக்கிய ஆர்வலர்களின் உள்ளங்களில் தனி இடம் பெற்றவர். கவிக்கோ அப்துல் ரகுமான்.
தி.மு.க.வின் ஆஸ்தானக் கவிஞர்களில் ஒருவராக முதல்வர் கலைஞருக்கு நெருக்கமாகவும் இருந்த அவருக்கு இந்தப் பதவி பவழ்ங்கப் பட்டது இலக்கியத்தை நேசிக்க்கும் உள்ளங்களுக்கு மகிழ்ச்சியளித்துள்ளது.
தி.மு.க. வின் மாநாட்டு மேடைகளில் சங்க நாதம் செய்த நாகூர் ஹனீபாவுக்கு மரியாதை செய்தது போல கவிஞருக்கும் மரியாதை செய்து விட்டதில் தி.மு.கவின் உயர் மட்டத்திற்கு ஒரு ஆத்ம திருப்தி ஏற்பட்டிருக்கக் கூடும்.
ஆனால் ஒரு கசப்பான சதியியிருந்து அவரது இந்தப் பயணம் ஆரம்பமாகியிருப்பது முஸ்லிம் சமுதாயத்திற்கு கவலையளித்துள்ளது.

தமிழ்நாடு வக்பு வாரியம் ஊழல் மலிந்ததாக இருப்பதுதான் பெரும்பாலும் செய்தியாக இருக்கும். இந்த முறை அது அரசியல் சதிகளின் கூடாரமாக மாறியிருக்கிறது.

ஹைதர் அலியில் தொடங்கிய வக்போர்டின் சோகம் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க கையாண்ட வழிமுறையிலிலும் தொடர்கிறது.

பள்ளிவாசல்கள் மதரஸாக்கள் தர்காக்கள் உள்ளிட்ட புனித தலங்களின் நிர்வாக அமைப்பில் ஊழல்கள் புழுத்துப் போயிருப்பதும் சதித் திட்டங்களால் மூச்சுத்திணறுவதும் தமிழ முஸ்லிம் ஜமாத்துகளுக்கு ஒரு சோதனையே .

ஜூன் 5 ம் தேதி டெக்கான் கிரானிகளில் “அதிகாரிகள் என்னை ஏமாற்றி விட்டார்கள்” என்ற தமிழக தலைமைக் காஜி சலாஹுத்தீன் அய்யுபியின் அறிக்கையை படித்த முஸ்லிம்கள் கொஞ்சம் பதறித்தான் போனார்கள்.

வக்பு போர்டு என்பது இஸ்லாமிய வக்பு நிருவணங்களை நிர்வகிக்கவும் கண்காணிக்கவும் செய்கிற ஒரு அமைப்பாகும்.

தமிழ முஸ்லிம் கிராமங்கள் ஒன்றில் ஒரு பள்ளிவாசலில் ரமலான் மாதத்தின் சிறப்பு தொழுகையான தராவீஹ் தொழுகை குர் ஆனை மன்னம் செய்த ஒருவரைக் கொண்டு நடைபெறவில்லை. இதை அறிந்த ஒரு முஸ்லிம் பிரமுகர் அதற்கான காரணத்தை விசாரித்திருக்கிறார் அவ்வாறு தொழ வைக்கிற இமாகுக்கு கொடுக்கத் தேவையான பண வசதி இல்லை என்று கூறப்பட்டது. அப்படியானல் நான் நான்கு ஏக்கர் நிலம் தருகிறேன் அதில் கிடைக்கிற வருமானத்தை வைத்து ஆண்டு தோறும் தராவீஹ் தொழுகையை குர் ஆனை மனனம் செய்த ஒருவரைக் கொண்டு நடத்துங்கள் என்று நான்கு ஏக்கர் நிலத்தை தானம் செய்தார், அந்த தானத்திற்கு வக்பு என்று பெயர். இது போல பல்வேறு பட்ட சமய சமுதாய நோக்கங்களுக்காக வக்பு செய்யப் பட்ட சுமார் 6694 வக்பு நிறுவனங்களை தமிழகத்தில் அந்ததப் பகுதிகளில் உள்ள பொறுப்பாளர்கள் நிர்வகித்து வருகிறார்கள். சென்னை அண்ணா சாலையில் உள்ள காயிதே மில்லத் கல்லூரி வக்பு சொத்துக்களில் ஒன்று எடுத்துக் கொண்டால் இது போன்ற பிரதான இடங்களில் இருக்கிற வக்பு சொத்துக்களின் மதிப்பு கணிப்புக்களுக்கு அப்பாற்பட்டது. வக்பு வாரியத்தின் முன்னாள் தலைவர் ஹைதர் அலி அவர்களால் தி.மு.கவிற்கு வழங்கப் பட்டதக திரு பி.ஜே குற்றம் சாட்டுகிற திருச்சியில் உள்ள கலைஞர் அறிவாலத்தின் நிலமும் வக்பு சொத்துதான் என்றால் வக்பு வார்யத்தின் நிர்வாகக்கட்டுப் பாட்டில் உள்ள சொத்துக்களின் மதிப்பை நீங்களே கற்பனை செய்துகொள்ளுங்களேன். அவர்களை கண்காணிக்கவும் அவற்றை மேம்படுத்தவும் அரசாங்கத்தால் ஏற்படுத்தப் பட்ட அமைப்பு தான் வக்பு வாரியம்.

வக்பு வாரியத்தின் பணிகளையும் அதன் அதிகார வரம்பையும் 1995 ம் ஆண்டில் நிறைவேற்ற்ப் பட்ட வக்பு சட்டம் வக்பு சட்டம் வரையறூத்தது.

வக்பு சொத்தின் மூலப்பதிவு அதன் வறுவாய் அதை செலவிட வேண்டிய வழிகள் அதன் பயணாளிகளை பற்றிய ஆவணங்களை பராமரிப்பது, வக்பின் வருவாய் அதற்குரிய வழியில்தான் செலவிடப் படுகிறதா என்பதை உறுதிப்படுத்துவது, வக்பு நிறுவனங்களின் கணக்கு வழக்குகளை கண்காணிப்பது தேவை ஏற்படும் இடங்களுக்கு பொறுப்பாளர்களை நியமிப்பது அல்லது நீக்குவது. வக்பு சொத்துக்களை நிர்வகிப்பவர்களுக்கு தேவையான அறிவுரைகளை வழங்குவது, வக்பு நிறுவனங்குளுக்கு இழப்புக்கள் எதுவும் ஏற்படாமல் பாதுகாப்பது. வக்பு சொத்துக்களை கண்டறிவது, வக்பு சொத்துக்களை விற்பது, அல்லது குத்தகைக்கு விடுவது அல்லது பரிமாற்றம் செயவ்து, ஆகியவை வக்பு வாரியத்தின் பணிகள் அதன் அதிகார எல்லககள் என அச்சட்டம் கூறுகிறது.

வக்பு வாரியத்தின் நிர்வாகச் செலவுகளுக்காக மாநில மத்திய அரசுகள் உதவுகின்றன, 1990 5 லட்சமாக இருந்த மாநில அரசின் உதவி 2008 ம் ஆண்டில் 45 லட்சமாக அதிகரித்திருக்கிறது. இடக்காலங்களில் வக்புவாரியத்திற்கு ஏற்பட்ட அதிகப் படியான செலவை ஈடுகட்ட அரசு விஷேச நிதியை விடுவித்துள்ளது.

ஒரு பள்ளிவாசல் ஐந்து நேரத் தொழுகைக்காக முஸ்லிம்களுக்காக திறந்து விடப் படும் என்றால் அதுவும் வக்பு சொத்தாகிவிசும் என்ற வகையில் பெரும்பாலான பள்ளிவாசல்களும் வக்பு வாரியாத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளன. அவ்வாறூ இணைத்துக் கொள்ளப பட்டிருப்பதால் அந்நிறுவனங்களை நிர்வகிக்கிற பொறூப்பாளர்கள் அதை நடத்துவதற்கு பெரும்பாடு பட்டி காசிபணத்தைச் சேர்த்த்தால் அதிக் ஏழு சதவீதத்தை வக்பு வாரியத்திற்கு கப்பமாக கட்ட வேண்டும். இதற்கு பிரதியாக அந்த வக்பு நிறுவனத்திற்கு ஏதாவது செலவு ஏற்பட்டால வக்பு வாரியம் வழங்கும். அதைப் பெறுவதற்குள் அந்த நிறுவனத்தின் தாவு தீர்ந்து விடும்.

வக்பு வாரியத்திற்கு வக்பு நிறுவனங்கள் வழங்குகிற 7 சதவீத பங்குதான் வக்பு வாரியத்தின் முக்கிய வருவாய் ஆகும். 1997 ல் 58 லட்சமாக இருந்த இந்த வருவாய் படிப்படியாக அதிகரித்து 2008 ம் ஆண்டில் இரண்டு கோடியே பத்து லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது.

வக்பு வாரிய சொத்துக்களை பராமரிப்பதை தவிர்த்து வக்பு வாரிய நிதியிலிருந்து நிறைவேற்றப் படுகிற பிர்தான திட்டங்களில் ஒன்று உலமா ஓய்வூதிய திட்டமாகும்.

1981 ம் ஆண்டு தமிழக அரசால அறிமுகப் படுத்த்டப் பட்ட திட்டத்தின் படி, வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட ஏதேனும் ஒரு நிறுவனத்தில் 20 ஆண்டுகள் இமாமாக (தொழுகைக்கு தலைமயேற்பவர்) முஅத்தின் ( பாங்கு தொழுகைக்கான அழைப்பொலி கொடுப்பவர்) அரபி ஆசிரியராக பணியாற்றிய 60 வயது நிறைந்தவருக்கு வேறுவகையான வாழ்வாதாரங்கள் எதுவும் இல்லை என்றால் அவருக்கு ஓய்வூதியமாக ஒரு தொகை வழங்கப் படுகிறது. 2000 மாவது ஆண்டில் கொண்ட் வரப்பட்ட ஒரு திருத்தத்தின் படி தர்காக்களில் பண் செய்கிற முஜாவிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப் பட்டது. அத்தோடு ஊணமுற்றவர்களுக்கும் நிரந்தர நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கும் வயது வரம்பு 50 ஆகவும் பணிக்காலம் 10 ஆண்டுகள் எனவும் குறைக்கப் பட்டது.

தொடக்கத்தில் 400 பேர் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற்று வந்தனர். 1998 ம் ஆண்டு அந்த எண்ணிக்கை 2200 ஆக உயர்ந்தத்து. 2008 ல் இந்த எண்ணிக்கை 2400 ஆக் உயர்த்தப் பட்டிருக்கிறது. அது போல ஆரம்பத்தில் 250 ரூபாயாக இருந்த உத்வித் தொகை 400 - 500 என உயர்த்தப் பட்டு 2005 ம் ஆண்Dஉ முதல் 750 ரூபாயாக உயர்த்தப் பட்டுள்ளது. தற்போதைய கணக்கின் படி 2400 பேர் 750 ரூபாய் உதவுத் தொகை பெற்று வருகினறனர் என்று வக்பு வாரியத்தின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது என்றாலும் தகுதியான ஆலிம்களுக்கு இத்திட்டத்தின் பயன்கள் போய்ச் சேரவில்லை என்ற ஒரு குற்றச் சாட்டு பரவலாக உண்டு.

உலமா பென்சன் பெறுவதற்கு தகுதியானவர்களை தேர்வு செய்யும் அதிகாடம் வக்ப்புவாரியத்தின் தலைநிர்வாகிக்கு வழங்கப்பட்டுள்ளது, தகுதியானவர்களை அவருக்கு அடையாளம் காட்ட S.A. அப்துஸ் ஸலாம் மிஸ்பாஹி, M.H. சம்சுத்தீன் ஆலிம் S.S. ஹைதர் அலி மிஸ்பாஹி, M.E. ஜமாலுத்தீன் S.S. கலந்தர் மஸ்தான் ரஹ்மானி, O.M. அப்துக் காதிர் பாகவி ஆகியோரைக் கொண்ட ஒரு குழு நியமிக்கப் பட்டுள்ளதாக வக்பு வாரியத்தின் இணைய தளம் கூறுகிறது.

ஆலிம் ஓய்வூதியத்தை தவிர முஸ்லிம் விதவைப் பெண்களின் உரிமைப் பாதுகாப்புச் சட்டப்படி விதவைப் பெண்கள் சிலருக்கு உதவித் தொகை வழங்கப் படுகிறது.

வக்பு வாரியத்திற்கு 13 உறுப்பினர்கள் உண்டு. பேரா காதர் மைதீன் ஹாரூன் MP சட்ட மன்ற உறுப்பினர்களான கலீலுரஹ்மான் கவுஸ் பாஷா I.A.S. அதிகாரியான அலவுதீன் ஆகியோருடன் இஸ்லாமிய சட்ட விசயங்களுக்கான ஆலோனை வழங்குவதற்கு வசதியாக சுன்னத் ஜமாத்தை சார்ந்த ஒரு காஜியும் ஷியா பிரிவைச் சார்ந்த ஒரு காஜியும் உறுப்பினர்களாக இருந்தனர். அந்த வகையில் தான் சுன்னத் ஜமாத்தைச் சார்ந்த மார்க்க அறிஞர் தமிழக அரசின் தலைமைகாஜியான சலாஹுத்தீன் அய்யூபி நியமிக்கப் பட்டு செயலாற்றி வந்தார். இந்நிலையில் தான் தி.மு.க. அரசு முஸ்லிம் சமூகத்தின் அதிருப்தி பிரிவிவைச் சார்ந்த ஹைதர் அலியை அரசியல் காரணங்களுக்காக வக்பு வாரியத்தின் தலைவராக நியமித்தது.

ஆளூம் கட்சிக்கு அல்லது அதன் அரசியல் தலைமைக்கு விசிவாசியாக அல்லது கவணிக்கப் படாதோர் லிஸ்டில் இருக்கிற ஏதேவது ஒரு அரசியல் பிரமுகருக்கு வக்பு வாரியத் தலைமை பதவி வழங்கப் படும். அவரும் சிவப்பு விளக்கு சுழலும் கார் வேண்டும் பள்ளிவாசல்களில் பச்சைக கம்பள வரவேற்பு வேண்டும் என்ற வகையில் தன் தேவைகளை பெற்றுக் கொண்டு போய்விடுவார்.

இதனால் ஒரு பக்கம் வக்பு வாரியத்தில் ஊழல் மலிந்து போனது வக்பு நிறுவனங்களின் பொறுப்பாளர்கள் தங்களது நியாயமான் தேவைகளை பெற்றுக் கொள்வதற்கு கூட வக்பு வாரிய அதிகாரிகளுக்கு இலஞ்சம் தரவேண்டியிருந்தது. ஒரு பள்ளிவாசலில் கட்டிடப் பணிக்காக வக்பு வாரியத்தின் உதவியை நாடிய அதன் நிர்வாகத்தின் அது பற்றிய கோப்பை வாரியத் தலைவரின் மேஜைக்கு கொண்டு சேர்க்க 15 ஆயிரம் ரூபாய் பணம் வழங்கியதாக என்னிடம் கூறினார். கோப்பு மேஜைக்குச் சென்றதே தவிர கைய்ழுத்தாகவில்லை என்பது வேறு விசயம். இது போல வக்பு வாரியத்தின் நன்மையை பெறவும் தக்கவைத்துக் கொள்ளவும் கைமாறிய பணத்தில் வக்பு வாரிய கண்காணிப்பாளர்கள் சிலர் கொளுத்துப் பெருத்தனர் என்பது பரவலாக உள்ள பேச்சு.

ஒரு பக்கம் வக்பு வாரியம் இப்படி சீரழிந்து கொண்டிருந்தாலும் வக்பு வாரியத் தலைவர்களாக பொறுப்பேற்றோர் வக்பு வாரிய்த்தை வைத்துக் கொண்டு பெறும்பாலும் முஸ்லிம் சமூகத்திற்குள் சலசலப்பை உண்டுபண்ணியதில்லை.

ஹைதர் அலி வக்பு வாரித்தலைவராக நியமிக்கப் பட்ட போது வக்பு வாரியம் சர்ச்சைகளின் களமாயிற்று. அவரது பல நடவடிக்களும் முஸ்லிம சமுதாயத்திற்குள் பலத்த அதிருப்தியை உண்டு பண்ணியது ஒரு வகையில் அது தி.மு.க அரசுக்கு தலைவலியாக அமைந்தது. தோழமைக்கட்ச்யான முஸ்லிம் லீக் வக்பு வாரியத் தலைவரின் நடவடிக்கயில் அதிருப்தி தமிழகத்திலுள்ள ஜமாத்துக்களை திரட்டி நடத்திய ஒரு கூட்டத்தில் தற்போதைய துணை முதல்வர் ஸ்டாலினை அழைத்து அவரிடம் நேரடியாகவே முறையிட்டது. பயனொன்றும் விளையவில்லை.

ஆட்சியாளர்கள் காட்டாத அக்கறையை ஆண்டவன் காட்டினான். தேர்தல் தொகுதி பெறுவது சம்பந்தமான சர்ச்சையில் தி.மு.க கூட்டணியிலிர்ந்து த.மு.மு.க வீராவேசமாக விலகிய போது வக்பு வாரியத்தை விட வேண்டியதாயிற்று. சோனியா காந்தி பிரதமர் பதவியை உதறியத்ற்கு நிகராக அவரது விலகுதலை அவர்களது புத்திசாலி தொண்டர்கள் ஆரவாரித்தனர். தியாகம் என்ற சொல்லின் பின்சேர்க்கையாக எத்தனை வார்த்தக்ளுக்கு இடம் இருக்குமோ அவை அத்தனையாலும் அவரை ஆராதித்தனர். அதன் பின்னணியில் இருக்கிற அவலம் இப்போது தான் பெரும்பாலோருக்கு தெரிந்தது. ஹைதர் அலி ராஜினாமா செய்தது தலைவர் பதவியை மட்டுமே! அவர் அடிப்படை உறுப்பினராகத் தொடர்கிறார்.

இந்நிலையில் வக்பு வாரியத்திற்கு புதிதாக நியமிக்கப்படவுள்ள தலைவர் பற்றி அனுமானங்கள் பேசப்பட்ட போது அதில் கவிஞர் அப்துல் ரஹ்மானின் பெயர் இருக்கவில்லை.

கலைஞருக்கு நெருக்கமாக இருந்த கவிஞருக்கு இதுவரை முக்கியமான எந்தப் பதவியும் வழங்கப்படவில்லை. அதுகுறித்து அவர் எந்த வருத்தத்தையும் வெளிக்காட்டிக் கொண்டதில்லை . என்றாலும் அவரைச் சுற்றி இருந்தவர்கள் அந்த மனக்குறை இருக்கத்தான் செய்தது.

சென்னையில் உள்ள ஏதேனும் ஒரு பல்கலைகழகத்தின் துணைவேந்தர் நாற்காலி தனக்கு தர்ப்படக் கூடும் என்று கவிஞர் எதிர்பார்ப்பதாக அவரது ரசிகர்கள் பேசிக்கொண்ட போதும் கவிஞர் வாய் திறந்து எதையும் கேட்டதில்லை.

அவர் ராஜ்யசபா உறுப்பினராகக் கூடும் என்ற எதிர்பார்ப்பு அவரது ஆதரவாளர்கள் மட்டத்தில் இருந்தது

இந்நிலயில் திடீரென அவரே வலிந்து சென்று விண்ணப்பம் செய்து வக்பு போர்டின் தலைமை பதவிப் பெற்றதாக செய்திகள் அடிபடுகின்றன. அது அம்மி கொத்த விரும்பாத இந்தச் சிற்பி இப்போது ஏன் கல்லுடைக்க்கிற வேலைக்குச் சேர்ந்தார் என்று அவரது அபிமானிகளுக்கு ஆச்சரியத்தை அளித்தது.

அதன் பிறகுதான் திரைமறைவு வேலைகள் அரங்கேறின. வாரியத்தின் உறுப்பினர்கள் தான் தங்களில் ஒருவரை அரசாங்கத்தின் அறிவுரைப்படி தலைவராக தேர்ந்தெடுப்பார்கள். ஹைதர் அலி அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகாததால் வக்பு போர்டின் உறுப்பினர் நாற்காலி எதுவும் காலியில்லை. வக்பு போர்டின் பிரதான அதிகாரிகள் ஹைதர் அலிக்கும் அவரது நடைமுறைக்கும் சார்பாக இருந்தனர் என்றும் பேசப்படுகிறது. இந்நிலையில் தான் திராவிட அரசியலுக்குப் பழக்கமான தந்திரங்கள் தீட்டப் பட்டன. இதற்கு அரசியல் பிரமுகர்கள் நிர்வாக முதலைகள் பதவி சுகம் தேடுவோர் அத்னை பேரும் சேர்ந்து “ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ .. என்ற ரீதியில் திட்டம் தீட்டினர். நியாயப் படி ஹைதர் அலியிடம் தான் அவர்கள் ராஜினாமா கேட்டிருக்க வேண்டும். அதற்கு துணிச்சல் இல்லாததாலோ அல்லது அவருக்கு துணையாக இருப்பவர்களாலோ அது நடைபெறவில்லை

வாரியக் கூட்டத்தில் சுன்னத் ஜமாத்துக்களின் சார்பில் அடிக்கடி குரல் எழுப்புகிற காஜி சலாஹுத்தீன் அய்யூபி அவர்களுக்கு சிரமம் தராத பலிகடாவாக தோன்றினார்.மார்க்க விசயத்தின் கண்டிப்பானவர் என்றாலும் சூது வாதில்லாத அப்பாவி என்பது அவர்களுக்கு வசதியாகப் போய்விட்டது.

அவரிடமே நேரடியாக விசயத்தைப் பேசி ராஜினாம செய்யுங்கள் என்று கேட்டிருந்தால அவர் ராஜினா செய்திருக்கக் கூடும். திராவிட அரசியல் கலாச்சாரத்தில் அவ்வாறு செய்யாவிட்டால் என்ன நடக்கும் என்பது நாடறிந்தது தானே! ஆனால் அவசரக்காரகள் குறுக்கு வழியை தேர்வு செய்தனர்.

வக்பு வாரியத்தின் பிரதான அதிகாரியும் சர்ச்சைக்குரியவ்ருமான A. Mohamed Jamaluddin, M.Com., B.L., MBA., மற்றொருவரும் சலாஹுத்தீன் அய்யூபியை சந்தித்து அரசு வக்பு வாரியத்தை மாற்றி அமைக்க விரும்புகிறது எல்லோரும் ராஜினாமா செய்து விட்டார்கள் நீங்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.

பள்ளிவாசல்கள் தர்ஹாக்கள் போன்ற உயர் அமைப்புக்களை நிர்வகிக்கிற பொறுப்பில் இருக்கிற அந்த அதிகாரிகள் அப்பட்டமாக அப்படிப் பொய் சொல்வார்கள் என்று அவ்ர் எதிர்பார்க்கவில்லை. ராஜினாமா செய்து விடுகிறேன் என்றூ சொல்லியிருக்கிறார். இல்லை இப்போதே வேண்டும் என்று கேட்டுள்ளனர். ம்ஃரிபு தொழுது விட்டு எழுதித் தருகிறேன் என்று காஜி சொன்னார். நீங்கள் சிரமப் பட வேண்டியதில்லை நாங்களே தயாராக கொண்டு வந்திருக்கிறோம் நீங்கள் கையெழுத்திட்டால் போதும் என்று கூறியதாக பதிரிககளுக்கு காஜி தெரிவித்துள்ளார். அவர்கள் கொடுத்த தாளில் கையெழுத்திட்ட காஜிக்கு தன்னிடம் மட்டுமே ஏமாற்றி ராஜினாமா பெற்றுள்ளனர் என்ற செய்தி பிற்பாடு தெரியவந்துள்ளது. அவர் அதிர்ந்து போனார். பதவி போனது குறித்து அவர் கவலைப் பட வில்லை. கவிக்கோவை தலைவராக்குவதற்கு தனக்கு எந்த ஆட்சோபனயும் இல்லை என்று கூறிய அவர் அரசின் உயர் அதிகாரி தன்னை முட்டாளாக்கிவிட்டது தான் பெருத்த கவலையை ஏற்படுத்தியுள்ளது கூறிவிட்டு சென்னனை விட்டு வெளியேறி விட்டார். ஆற்காட்டு இளவரசர் உள்ளிட்ட சில அக்கறை கொண்ட முஸ்லிம் பிரமுகர்களின் முயற்சியாலதான் இந்தப் பிரச்சினை ஓரளவுக்கு மக்களின் பார்வைக்கு வந்தது.

முஸ்க்லிம் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தாலும் பதவி தேவைப்பட்டவர்களுக்கு அது எந்த வெட்கத்தையும் தரவில்லை. போய்யான ராஜினாமா நிராகரிக்கப் படவுமில்லை. நாடகம் ஆடிய அதிகாரி யின் மீது ஒழுங்கு நடவடிக்கையும் இல்லை,

தலைமைக் காஜியுடன் வக்பு போர்டில் பணியாற்றிய மற்ற உறுப்பினர்களும் தங்களது சகாவுக்கு நடந்த இந்த அக்கிரமம் குறித்து அலட்டிக் கொள்ளவில்லை. நல்ல வேளை ஜமாலுத்தீன் நம் வீட்டுக் கதவை தட்டவில்லை என்று ஆசுவாசமடைந்ததோடு பிரச்சினையை விட்டுவிட்ட அவர்கள் கவிக்கோவிற்கு வரவேற்பளிக்கத் தயாராகிவிட்டார்கள் பதவி என்பது மோசேயின் மந்திரக் கோல் அல்லவா?

ஆலிம்கள் என்றால் கிள்ளுக் கீரைகள் அவர்களைப் பொருட்படுத்தத் தேவையில்லை அவர்களுக்கு ஆர்ப்பாட்டமோ பேரணியோ நடத்துகிற அரசியல் தெரியாது என்ற தைரியமே வக்பு வாரிய அதிகாரிகள் மற்ற வக்பு வாரிய உறுப்பினர்கள் அரசியல் வாதிகள் அனைவரும் இந்த அக்கிரமத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க காரணமாகிவிட்டது. சொல்லி வைத்தாற் போல ஆலிம்கள் அமைப்பு எதுவும் தங்களது எதிர்ப்பை கூட பதிவு செய்யவில்லை. ஒரு வேளை அவர்களும் கவிக்கோவிற்கு மாலையோ சால்வையோ வாங்க கடைவீதிக்கு செல்லும் அவசரத்தில் இருந்திருக்கலாம்.

வக்பு வாரியம் இந்த அசுத்தக் கறையோடு ஒரு புதிய தலைவருக்கு மாலை சூடிவிட்டது. வக்போர்டு அதிகாரிகளின் நடத்தை கவிக்கோவின் பட்டாபிசேகத்தை கொல்லைப் புற பிரவேசமாக்கி விட்டது. இந்த முதல் கோணல். முற்றிலும் கோணலாகி விடக்கூடாது என்று முஸ்லிம் சமுதாயம் கவலையடைந்துள்ளது.

துரதிஷ்ட வசமாக கவிக்கோ வக்பு போரு தலைவராக பொறுப்பேற்க வந்த வழி தவறாகி விட்டது எம்றாலும் பொற்ப்பேற்றதும் அவர் செய்த பல அறிவிப்புக்களும் பளபள்பாக இருக்கின்றன. அது அவரது அதிகார வரம்பிற்கு உட்பட்டவை தானா என்று சிலர் நக்கல் செய்திருக்கிறார்கள் என்றாலும் அது தேவையற்றது. அவரால் செய்ய முடிந்த நல்ல காரியங்களை அவர் செய்யட்டும்.

கவிக்கோ இப்போது தன்னை முஸ்லிம் சமூகத்தின் காட்பாதராக கற்பனை செய்து கொண்டிருக்கிறார். அது அவருக்குள் ஏராளமான திட்டங்களையும் தீர்மாணங்களையும் வழங்கிக் கொண்டே இருக்கிறது. அதனால் எதற்கு ஒரு முறை வக்ப் வாரிய சட்டத்தையும் நோக்கத்தையும் அவர் படித்துப் பார்த்துக் கொள்வது நல்லது. வக்பு நிறுவனங்களின் பராமரிப்பு மேம்பாடு சீரமைப்பு குறித்து அவர் நிறையச் செய்ய வேண்டியுள்ளது. வக்பு வாரியத் அதிகாரிகள் அவருக்கு உடந்தையாக இருக்கட்டும்.

காஜிக்கு செய்த பாவத்திற்கு எதாவது பரிகாரம் செய்தாக வேண்டு மல்லவா?