Tuesday, October 19, 2010

வஹாபிஸ தீவிரவாதம்

“திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே திருவிடைச்சேரியில் உள்ள மஸ்ஜித் மினா பள்ளி வாசலில் தமிழ்நாடு தவஹீத் ஜமாத் அமைப்பை சேர்ந்த குண்டர்கள் துப்பாக்கியால் சுட்ட்தில் ஜமாத் பொறுப்பாளர்கள் இருவர் மரணம்” என்ற செய்தி இந்த ஆண்டு ரமலான் மாத்த்தில் தமிழக மக்களை அதிர்ச்சியில் உரைய வைத்தது.

திட்டமிட்டு இத்தாக்குதலில் ஈடுபட்ட கொடியவர்களில் ஒருவன் கண்மூடித்தனமாக சுட்ட்தில் இரண்டு பேர் பலியாகினர். மூன்று ஹிந்துக்கள் உட்பட நான்கு பேர் ப்டுகாயம்டைந்த்துள்ளனர். தற்போது அவர்களில் மூன்று பேரின் உடல் நிலை ஓரளவு தேறிவிட்ட்து எனினும் பால்ராஜ் எனும் ஒருவர் இன்னும் மருத்துவ மனையில் இருக்கிறார். திருவிடைச்சேரி எனும் சுமார் 200 குடும்பங்களைக் கொண்ட சிற்றூர் இன்னும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளமுடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது.

தராவீஹ் தொழுகைகைப்பின் கூடியமர்ந்து ஒரு ஜுஸ்வு (சிறு பகுதி) குர்ஆன் ஒதும் பழக்கம் உடைய அந்த ஊர் மக்களுக்கு செப்டம்பர் 5 ம் தேதி இரவு கெட்ட கனவாக அல்ல மிக்க் கெட்ட நனவாக மாறிப்போனது. தவ்ஹீதியப் போவையில் வேத்த்தை கையிலேந்தியிருப்பதாக கூறும் சாத்தான்கள் உண்மையில் தங்களது கைகளில் என்ன வைத்திருக்கிறார்கள் என்பதை உணராத அவர்கள் தங்களது இன்னுயிர் இரண்டை பறிகொடுத்தனர்.

குண்ட்டி பட்டு ஷஹீதான ஒருவரின் உறவினரிடம் தொடர்பு கொண்ட போது ஊருக்குள் என்ன நிலைமை என்று அறிந்து கொள்ளக் கூட இன்னும் தாங்கள தயாராகவில்லை என்று தழுதழுத்தார். சமீபத்திய தமிழக வரலாற்றில் இப்படி ஒரு கொடுமை ஒரு நல்ல நாளில் நிகழ்ந்து நான் அறியவில்லை என்கிறார் ஒரு முதியவர்.

மகிமை மிக்க லைலத்துல் கத்ர் இரவை வரவேற்கும் மக்ழிச்சியில் திழைத்திருந்த தமிழக முஸ்லிம்களை ஆழிய சோகத்திற்குள் தள்ளியது இந்தச் செய்தி. பெண்கள் சிறுவர்கள் உட்பட அனைவரும் நடைபெற்ற அக்கிரம்த்தை கண்டு பெரிதும் அதிர்ச்சிய்டைந்தனர். சுன்னத் ஜ்மாத்தோடு கருத்துவேறுபாடு கொண்ட அமைப்பினர் கூட தவ்ஹீத் ஜமாத்தின் காட்டுமிராண்டித்தனத்தை வீதிகளில் கடுமையாக விமர்ச்சித்த்தையும் அவர்கள் இவ்வாறு செய்யக் கூடியவகள் தான் என்று பேசிக்கொண்ட்தையும் பரவலாக காண முடிந்த்து.

திரு பிஜே வின் பிரவேசத்தின விளைவாக தமிழக்ம் சந்தித்த் கொடூரங்களில் ஒரு உச்சபட்ச பாதிப்பாக கருதப்படுகிற இந்த கொலைவெறித் தாக்க்குதல் தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்பின் தீவிரவாதப் போக்கின் ஒரு சிறு பொறிதான் என்றும் தமிழகம் தோறும் இவ்வமைப்பினர் இவ்வாறே மூளைச் சலவைச் செய்து தாயார்படுத்தப் பட்டுள்ளனர் என்றும் கசிகின்ற தகவல்கள் தமிழக் முஸ்லிம்களை பெரிதும் சலனத்திற்குள்ளாக்கி உள்ளது.

தமிழ்கத்தில் இத்தகைய படு மோசமாமான பிரச்சினையை உண்டு பண்ணுகிற அமைப்பினரை அழைத்துச் சென்று பிரதமரைச் சந்திக்க வைத்த காங்கிரஸ் பிரமுகரும், சோனியாவுக்கு நெருங்கியவருமான ஹஜ் கமிட்டித் தலைவர் ஜே எம் ஹாரூன், தேசிய லீக் தலைவர் பஷீர் ஆகியோரும் இது விசயத்தில் சமுதாயத்திற்கு பதில அளிக்க கடமைப் பட்டவர்களே! அரசியல் லாபத்திற்காக அற்பமானபவர்களை தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடும் துர்பாக்கியம் இவர்களுக்கு ஏன் ஏற்பட்ட்து என்பது புரியாத புதிரே!

எந்ங்க ஆளுக்கு பிரைம் மினிஸ்டர் வரை செல்வாக்கு இருக்கிறது என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தை சார்ந்த அமைப்பினர் சமீபகாலத்தில் மார்தட்டிக் கொள்ளத் தொடங்கிர்யிருந்தனர். அவர்களுக்கு கிடைத்த அந்த தவறான அஙகீகாரம் கூட அவ்வமைப்பினர் இத்தகைய படு பாதகமான கொலைகளை செய்யும் துணிச்சலை தந்திருக்கலாம் என்று குடவசலைச் சாந்த ஒரு பிரமுகர் கூறினார்.

இந்தப் பிரச்சினையில் எங்களுக்கு எந்த தொட்ர்பும் இல்லை என்று திரு பிஜே வெளியிட்ட அறிக்கை அப்பன் குதிருக்குள் இல்லை என்பதைப் போன்றதே! சம்பந்தம் இல்லை என்றால் ஒற்றை வரி போதுமானது. அல்லாஹ்வுக்கு எதிராக பொய்சொல்லிப் பழகியவர்களுக்கு ஆட்சியாளர்களையும் காவல்துறையினரையும் சரிக்கட்ட பொய் சொல்வது ஒரு பெரிய விசய்மே அல்ல. அவர் இது போன்ற குற்றச் செயல்கள் பலவற்றிற்கும் பின்னணியில் இருந்திருக்கிறார் என்று அவரது முன்னாள் அபிமானிகளே குற்றம் சாட்டுகிறார்கள்.

துப்பாக்கிச் சூட்டைவிட பிஜே வின அறிக்கை தனக்கு அதிகம் அதிர்ச்சியை தந்த்த்தாக அவருடன் நீண்ட கால தொடர்பில் இருந்த ஒருவர் கூறினார். பிஜே தனக்கென உருவாக்கியிருந்த ஒரு மெய்க்காவலர் படை பற்றிய தகவலகளை தமிழக காவல் துறை ஆராய வேண்டும் என்று அவர் கூறிய போது பிஜே என்பவருக்குப் பின்னேயும் அவரது அமைப்புக்குப் பின்னேயும் அணிவகுத்து நிற்கிற மர்மங்களைப் பற்றிய அச்சம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்ல.

பொதுவாக தூய்மைவாதம் பேசிய அமைப்புக்கள் பலவும் மார்க்கத்திற்கும் பக்திக்கும் தொடர்பில்லாத சண்டித்தனம் செய்கிற இளைஞர்களை வைத்துக் கொண்டு, சமூக மரியாதையோடு எதற்கும் தயங்கித் தயங்கிச் செயல்படுகிற ஜமாத் அமைப்புக்களுகும் அந்த ஜமாத்தை அணுகி வாழும் முஸ்லிம் மக்களுக்கும் எதிராக பல அராஜகங்களை செய்துவருவது அனைவரும் அறிந்த்தே!

தொழுகை அல்லது சொற்பொழிவு என்ற பெய்ரில் 10 பேர் இருபது பேர் மட்டுமே கூடக் கூடிய இடங்களில் ஆயிரம் பேருக்கு கேட்கிற மாதிரி ஒலி பெருக்கிகளை வைத்துக் கொள்வது இவர்களது கலாச்சாரம். பொது மைக் விதிக்கு அரசு அனுமதித்திருக்கிற டெஸிபிள்ளை எகிரிகுதிக்கிற அளவில் வைத்துக் கொண்டு தீனை (?) பயங்கரமாக பரப்புகிற இந்த நடைமுறை தமிழகத்தின் அனைத்துப் பகுதியிலும் நடக்கிற கொடுமை. இந்த நாசமாய போன்வன்களிடம் என்னத்தை பேசுவது? எனற விரக்தியிலேயே இவர்களது இடங்களுக்கு அருகில் இருக்கிற மக்கள் பேசா மடந்தைகளாக இருந்து விடுகிறார்கள். தேர்வுக்கு படிக்கிற மாணவர்கள், உடல் ந்லமில்லாதவர்கள் ஏன் வீடுகளில் உட்கார்ந்து குரான் ஒதுபவர்களுக்கு கூட பெரும் தொல்லையாக இவர்களது நடவ்டிக்கைகள் அமைந்திருப்பதை இவர்களது வழிபாட்டுக் கூடங்கள் அமைந்துள்ள பகுதிக்கு அருகே வசிப்பவர்கள் அறிவார்கள். ஊரே அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கிற நேரத்தில் அதிக சப்த்த்தில் மைக் போட்டு பிரச்சாரம் செய்கிற அழகை(?)ப் பார்த்தால் எந்த வகை கிறுக்க்ன்கள் இவர்கள் என்றுதான் எண்ணத் தோன்றும். தீவிரவாத்த்தின் இன்னொருவகையான வெளிப்பாடாகத்தான் இதை கருத வேண்டும். ரம்லான் வந்து விட்டால் இந்தக் கிறுக்குத்தனக்கு இன்னும் வலிமை கூடிவிடும்.

திருவிடைச் சேரியி 12 13 அடிகளே கொண்ட பாதையின் ஒரு மூளையில் ஒரு வீட்டில் சுமார் 15 முதல் இருபது பேர் மட்டுமே கூடக்கூடிய இட்த்தில் தனியாக கூட்த்தொடங்கிய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினர் வழக்கப் படி ஒலி பெருக்கிகளை அலற விட்டுள்ளனர். அக்பரின் தீனே இலாஹி போல இவர்கள் புதிதாக வடிவமைத்துக் கொண்ட சம்யத்தின் படி ரமலானின் கடைசி பத்து நாட்களில் இரவு நடுநிசிக்கு மேல் கத்திக் கூப்பாடு போட்டுள்ளனர். அது அந்தப் பகுதி மக்களுக்கு பெரிதும் இடையூறாகியிருக்கிறது. என்வே அவர்கள் இவர்களுக்கு இடமளித்து உற்சாகப் படுத்தி வருகிற ரோஸ் பாப்பா என்ற கமருன்னிஸா என்ற பெண்மணியிடம் இது குறித்து கேள்வியெழுப்பியுள்ளனர். அந்தப் பெண் தங்களுடைய ஆட்களுக்கு செய்தி அனுப்பியிருக்கிறார். அவர்கள் திரண்டுள்ளனர். பிரச்சினை பெரிதாகி இருக்கிறது

தராவீஹ் தொழுகைக்குப் பிறகு பள்ளிவாசலில் பிரச்சினையை பேசித்திர்த்துக் கொள்ள முடிவாகியிருக்கிறது. எப்போதுமே இந்த அமைப்பினர் ஒர் கூட்டமாக சகல் விதமான தயாரிப்புகளுடன் மேலிட்த்தின் ஆலோசனையின் படி மேலிட்த்தின் உடனடியான உதவியை ஏற்பாடு செய்து கொண்டு வருவதுதான் வழக்கம் அதனால் இவர்களுடன் பேசுவதென்றாலே தங்களைச் சுற்றியும் ஒரு கூட்ட்த்தை திர்ட்டிவைத்துக் கொள்வதை சுன்னத் ஜமாத்தை சார்ந்தவர்கள் பழகியிருக்கிறார்கள். ஆனால் இத்தகைய பிரச்சினைக்கு அனுபவமில்லாத திருவிடைச் சேரி ஜமாத்தார்கள் மக்கள் உறங்கச் சென்றுவிட்ட நேரத்தில் இவர்களை சந்தித்துள்ளனர்.

அந்த இட்த்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பள்ளி வாசலின் முக்கிய நபர்களில் ஒருவரான குத்புதீன் என்பவரால் அழைத்து வரப்பட்ட குண்டர்களிடம் துப்பாக்கி போன்ற பயங்கர ஆயுதங்கள் இருக்கும் என்று திருவிடைச் சேரி மக்கள் கனவிலும் நினைத்திருக்க வில்லை. துப்பாக்கி வைத்திருந்த ஹஜ் முஹம்மது என்பவன் பள்ளிவாசல் தலைவர் முஹம்மது இஸ்மாயில் வய்து (53) நோக்கி திடீரென துப்பாக்கியால் சுட்ட்டிருக்கிறான். அவனுக்கு அருகே நின்று கொண்டு ஒரு ஆள் இவன் தான் சுடு என்று ஆட்காட்டியதாகவும் ஊர்மக்கள் சொல்கிறார்கள். இந்தக் கொடுமைமையை கண்டு பதைத்து என்ன செய்வெதென்றூ தெரியாமல் பள்ளிவாசல் மைக்கில் செய்தியை தெரிவித்து மக்களை உஷார்படுத்தி விட்டு வந்த ஹஜ் முஹம்மது என்பவரையும் துப்பாக்கியால் சுட்டிருக்கிறான், அதற்கு பிறகு அந்தப் பக்கமாக நடந்து சென்றவர்கள் மீது சுட்டிருக்கிறான். இதில் 3 இந்துக்கள் உட்பட நான்கு பேர் துப்பாக்கி காயம் பட்டிருக்கிறது.முஹம்மது இஸ்மாயீலும் ஹஜ்முஹம்மதும் ஷஹீதாகிவிட்டனர்.

என்ன நடக்கிறது என்று யூகிப்பதற்குள் திட்டமிட்டபடி தாக்குதல் நட்த்தியவர்கள் தப்பியோடிவிட்டனர்,

தமிழக முஸ்லிம்களை கதி கலங்க வைத்த இந்த நிகழ்ச்சி தவ்ஹீத் ஜமாத்தின் திட்டமிட்ட ஒரு நடவடிக்கையே என்றும் சுன்னத் ஜமாத் நிர்வாகத்தினரை மிர்ராட்டிப் பணிய வைக்கும் ஒரு அரசியல் லாபம் தேடுகிற முயற்சி என்றும். இனி சுன்னத் ஜமாத்தினர் தவ்ஹீத ஜமாத்தினரைக் கண்டால் பதுங்கிக்கொள்வார்கள் என்ற குறுக்கு யோசனியே இது என்றும் விவரமறிந்த சிலர் கூறுகிறார்கள்,

பொதுவாக இந்த அமைப்பினர் அவர்களது தலைமையிடம் பேசி ஆலோச்னை செய்த பிறகே இத்தகைய நடவடிக்கையில் ஈடுபடுவது பழக்கம் என்றும் இவர்களைப் பற்றி அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

திருவாளர் பிஜே வின் வெளக்கெண்ணய் விளக்கம் இந்தச் செய்தியை உறுதிப் படுத்துகிற வித்த்தில் அமைந்திருப்பதோடு திருவிடைச்சேரி மக்களை பெரிதும் உஷனப் படுத்தவும் செய்திருக்கிறது.

திரு பிஜே முத்தவல்லிகள் உள்ளிட்ட பள்ளி வாசல நிர்வாகிகளை அராஜ்கப் பேர்வழிகள் என்று பேசுவதே இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்க்கும் அவருக்கும் இடையே உள்ள பினைப்பை பறை சாற்றுவதாக அவர்கள் கூறுகின்றனர்.

“இந்த ரமலான் மாதம் முழுக்க அந்த தறுதலைப் பயலுக பள்ளிவாசல் கஞ்சியத்தான் வாங்கிக் குடிச்சிட்டிருந்தானுங்க! அவனுங்க 10 பேருக்காக இரண்டு தூக்கு கஞ்சி பள்ளிசாலில் இருந்துதான் போச்சு. நாங்களா அராஜகப் பேர்வழிகள். என்று பெருமுகின்றனர் அவர்கள்.

தனிப்பட்ட குடும்ப்ப் பிரச்சினை என்றெல்லாம் அந்த அமைப்பினர் கதை கட்டுகின்றனர். அதற்கு பள்ளிவாசலுக்கு வந்து சுடுவானேன்? பள்ளிவாசலுக்கு நாற்பது ஐம்பது பேரை அழைத்து வர வேண்டிய அவசியம் என்ன? முத்தவல்லிகளைப் பற்றி கரித்துக் கொட்ட வேண்டிய அவசியம் என்ன வ்ந்த்து? என்ற்ம் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இந்தப் பிரச்சினைக்கு மூல காரணமாக தனது கொள்கை கூட்டாளிகளை அழைத்து வந்த குத்புதீன் எனபவர் தங்களது அமைப்பை சேர்ந்தவர் அல்ல என்ற ஒரு போர்ஜரி வேலையை அந்த அமைப்பு செய்கிறது. ஆனால் , ஊர்வாசிகளோ தவ்ஹீத் ஜமாத்தின் கூடம் அமைந்த அந்த இட்த்தின் வாசலில் அவர்களுக்கு நிதி வழங்குகிற நபர்களின் பெயர்ப் பட்டியலில் குத்புதீன் என்பவனின் பெய்ர் பதிவாகி இருப்பதை ஆதாரப் பூர்வமாக எடுத்து வைத்துள்ளனர்.

இவனுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை என்று திரு பிஜே வோ, அவரது அமைப்போ சொல்லுமெனில் இவன் அவர்களது ரக்சியக் கருவி என்றுதான் சொல்ல வேண்டும். அவ்வளவு தூரம் அந்த அமைப்புக்காக தீவிரமாக வேலை செய்தவன் அவன் என்கின்றனர் ஊர் வாசிகள்.

சுமார் 27 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர், முக்கியக் குற்றவாளி ஹஜ் முஹம்மது வின் வீட்டிலிருந்து மேலும் ஆயுதங்கள் கைப்ப்பற்றப் பட்டுள்ளன. அவன் சிதம்பரம் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளான. முஜீபுர் ரஹ்மான் என்பவன் இன்னும் தலை மறைவாக இருப்பதாக தெரிகிறது. அவ்ரது அமைப்பைச் சார்தவர்கள் அவனுக்கு அடைக்கலம் கொடுத்திருக்க்க் கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்தப் பிரச்சினையின் துவக்கமாக அமைந்த ரோஸ் பாப்பா என்ற பெண்மணி கைது செய்யப் படவில்லை. அவர் ஒரு பெண் என்பதால் தாங்கள் அவர் மீது குற்ற்ம சாட்டவில்லை என்கின்றன அந்த அப்பாவி மக்கள்.

பிரச்சினை நடந்த்தை அறிந்தவுடன் முஸ்லிம் கட்சிகள் அமைப்புக்கள் பலவும் விரைந்து வந்து நிகழ்ச்சிநடந்த இட்த்தை பார்வையிட்டுள்ளனர். ஆயினும் நிவாரணம் எதுவும் இதுவரை பாதிக்கப் பட்டவர்களுக்கு வழங்கப் படவில்லை. தமிழ அரசு அல்லது ஆளும் கட்சியின் சார்பாக இத்தாக்குதலுக்கு கண்டம எதுவும் தெரிவிக்கப் படவில்லை என்று ஊர்ப்பிரமுகர் ஒருவர் கூறினார்.

தமிழக முஸ்லிம் சம்தாயம் சந்தித்திராத இந்தக் கொடூரச் செயலுக்குப் பின்னால் உள்ளவர்களை தமிழக காவல்துறை கண்டறிய வேண்டும் என்று தமிழக முஸ்லிம்கள் எதிர்பார்க்கிறார்கள்’

உலகம் முழுவதிலும் பரவிவருகிற வஹாபிஸ் போலி தவ்ஹீதிய தீவிரவாத்தின் வேர் தமிழகத்திலும் வேர்கொண்டுள்ளதின் அதிர்ச்சிகரமான முதல் அடையாளமா இது? திருவிடைச் சேரி முதல் குறியா? என்ற சந்தேகம் பலருக்கும் அழுத்தமாக எழுந்துள்ளது.

ஸ்டாலினுடன் நெருக்கம், ஐஜியுடன் பேசுகிறோம், என்றெல்லாம் தவ்ஹீதி அமைப்பினர் நட்த்துகிற அலம்பல்களை கண்டு காவல் துறை கண்ணை மூடிக் கொண்டிருந்து விடக் கூடாது என்பதும் அனுபவஸ்தர்கள் பலரும் கூறினர்..

இது விசய்த்தில் சுன்னத் ஜமாத் அமைப்புக்கள் தங்களது ஒற்றுமையான ஆதரவை திருவிடச்சேரி முஸ்லிம்க்களுக்கு வ்ழங்க வேண்டும். தமிழ்கத்தில் உள்ள ஜமாத்துகள் சுன்னத் ஜமாத் அமைப்புக்கள் அணி திரண்டு போராடாவிட்டால் தங்களது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி குற்றவாளிகள் விரைவாக வெளியே வந்து விடுகிற வாய்ப்பு இருக்கிறது.

இத்தகைய வ்ன் செய்லுக்கு காரணமாக அமைந்த திரு பிஜே விடமிருந்து விலகி நிற்குமாறு திருநெல்வேலி ஆலிம்கள் அரசியல் கட்சிகளிடம் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் கிடைக்கிறது. அது சரியான சந்தர்பத்தில் மேற்கொள்ளப் பட்ட சரியான முடிவாகும்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்புடன் கூட்டணி வைத்துக் கொள்பவர்களுக்கு ஓட்டுப் போட மாட்டோம் என்ற உறுதியான முடிவுக்கு தமிழக முஸ்லிம்களை கோருவது என்று மாநிலம் முழுவதிலும் உள்ள மற்ற ஆலிம்களும் சமுதாயப் பிரமுகர்களும் அணிதிரண்டு வருகிறார்கள.

திரு பிஜே மற்றும் அவரது அமைப்பினரின் அதிகப்பட்ச எல்லை மீறுதல் காரணமாக அவர்களை முஸ்லிம் சமுதாயத்திடமிருந்து தனிமைப் படுத்திக்காட்டியாக வேண்டும் இல்லை எனில் இத்தீயசக்திகளால் சமுத்யாயம் இன்னும் அதிகப் பிரச்சினைகளை சந்திக்க வேண்டியதாகிவிடும் என்ற தீர்மாணத்திற்கு தமிழக ஆலிம்கள் தயாராகிவருகின்றனர். காதியானிகளைப் போல முஸ்லிம்களின் மையவாடிகளில் அடக்க்ம் செய்யப்பட இவ்வமைப்பினர் தகுதி உடையவர்கள் அல்ல என்னும் அளவுக்கு ஒரு உறுதியான முடிவுக்கு அவர்கள் வந்தால் மட்டுமே இந்த விசமிகளை தனிமைப் ப்டுத்த்துவது சாத்தியமாகும். காதியானிகளை விடவும் கடுமையாக இவர்கள் இஸ்லாமின் எல்லைகலை மீறியுள்ளனர். ஜகாத் விசயம் ஒன்றே இவர்களது சமயப் பிறழ்தலுக்கு போதுமான சான்று. ஜகாத் விசயத்தில் இவர்களின் நிலைப்பாட்டிற்கு பிறகு தமிழகத்தில் உள்ள அரபிக்கல்லூரிகளும் ஆலிம் அமைப்புக்களும் இத்தனை காலம் எப்படி இவர்களைப் பற்றி முஸ்லிம் சமுதயாத்திற்கு எச்சரிக்கை செய்யாமல் இருந்தார்கள் என்பது ஆச்சரியமானதே!

“அய்ன அபாக்கர்” (ஜகாத்தை தர மறுத்து மதம்மாறிய முர்த்த்களுக்கு எதிராக தீரத்துடன் போராடிய கலீபா அபூபாக்கர் எங்கே?) என்று அபுல் ஹசன் அலி நத்வி எழுதிய புத்தகம் தான் இது பற்றி யோசிக்கிற போது என் நினைவில் வரும்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்புக்கு எதிராக இத்தகைய உறுதியான நிலைப் பாட்டை தமிழக முஸ்லிம்களும் அவர்களுக்கு வழிகாட்டும் சில முக்கிய பிரமுகர்களும் எடுத்து விட்டால், இவ்வமைப்புடன் கூட்டணி வைத்துக் கொண்டு தமிழக்த்தை ஆள நினைப்பவர்களுக்கு அது அபாயச் சங்குதான்.

தமிழக அரசிய்ல் கட்சிகளில் ஏதாகிலும் ஒன்று இவர்களை அரவணைக்கும் எனில் அது தமிழகத்தின அமைதிக்கு அபாயச் சங்காக ஆக்க்கூடும்.

Tuesday, August 3, 2010

சசி தரூரின் வெளியுறவு

இலண்டனில் பிறந்து, துபாயிலும் நியூயார்க்கிலும் வாழ்ந்து திடீரென திருவணந்தபுரம் தொகுதியில் குதித்து நேரடியாக இந்தியாவின் வெளியுறவுத்துறை இணை அமைச்சரான சசி த்ரூர், 18 மாதத்திற்குள் தனது பதவியை இராஜினாமா செய்தார்.

2006ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் நடந்த போது அந்தப் பதிவிக்கு இந்தியா தனது சார்பில் சசி தரூரை முன்னிறுத்தியது.அப்போதுதான் “யார்ரா அது?” என்று இந்தியப் பொதுஜனம் அவரைப் பார்க்கத் தொடங்கியது.

த்ரூர் அந்தப் பதவிக்கு போட்டியிட்ட 7 பேரில் இரண்டாவதாக வந்த போது அவரது சர்வதேச மதிப்பை பற்றியதொரு பிம்பம் இந்திய அரசியலில் உருவானது. தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபையில் சசி, இந்தியாவின் சார்பில் இடம் பெறுவார் என்று யூகிக்கப்பட்டது.

ஆனால் அவர்சரமாய் தரையிறங்கிய அந்நிய நாட்டு விமானம் போல த்ரூர் 2009 ம் ஆண்டின் இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் குதித்தார். நாடுமுழுவதற்குமான தனது வேட்பாளர்களை தேர்வு செய்வதில் வழக்கம் போல தள்ளாடிக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சி, தனது முதல் அறிவிப்பிலேயே தரூரை திருவணந்தபுரம் நாடாளுமன்ற வேட்பாளராக அறிவித்து பத்ரிகையாளர்கள் உட்பட அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. ஏதே ஒரு பெரிய சக்தி தரூரின் பின்னாலிருந்து உந்தித் தள்ளுவதை அனைவரும் உணர்ந்தனர். அதனால் காங்கிரஸை பொதுவாக ஆதரித்த் போதும் சில முஸ்லிம் அமைப்புக்களும் மற்ற சிலரும் தரூரை ஏற்க மறுத்த்தனர்.

சத்தியமாய் நான் இந்தியனில்லை என்று சொல்லும்படியான ஆங்கிலம்- வாழ்க்கை முறை- பழக்க வழக்கங்கள் என்று வாழ்ந்து கொண்டிருந்தவர் திடீரென இந்திய அரசியலுக்குள் ஏன் நுழைந்தார் ? அவரை அழைத்து வந்தது யார்? எதற்காக அழைத்து வரப்பட்டார்? என்பதெல்லாம் கட்ந்த 2009 ம் ஆண்டின் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான கையோடு காணாமல் போய்விட்டது.

தரூர் 99998 வாக்குகளில் வெற்றிபெற்றார். அதைத் தொடர்ந்து நேரடியா இந்தியாவின் மிக மதிப்பு மிக்க வெளியுறவுத்துறை இணை அமைச்சர் பதவியைப் பெற்றார். அவருக்கு கிடைத்து வந்த செல்வாக்கு மர்மாமானதாகவே இருந்தது.

பதவியெற்ற புதிதிலேயே வெளியுறவுத்துறை மூத்த அமைச்சர் கிருஷ்ணாவுக்கும் அவருக்குமே மோதல் எழுந்தது. ஒருவகையாக சசி தரூருக்கு அவரது அதிகாரம் புரிய வைக்கப் பட்டது. பின்னரும் தொடர்ந்து த்ரூரின் மேற்கத்திய சொகுசுக் கலாச்சாரம் சர்ச்சையில் இடம் பிடித்துக் கொண்டே இருந்தது.

இந்தியப் பொதுஜனத்திற்கு, விமானமே இன்னும் ஆகாசத்தில் பறக்கிற அன்னப் பறைவாயகத்தன் இருக்கிறது என்பதை புரியாமல், விமானத்தின் சாதாரண வகுப்பை .த்ரூர், மாட்டுத் தொழுவம் என்றார். ஐந்து நட்சத்திர ஒட்டலை தில்லியில் தான் தங்கும் மேன்ஷனாக மாற்றிக் கொண்டார் இப்படியெல்லாம் தொடர்ந்த சங்கதிகளில் தரூர் வேடந்தாங்களுக்கு வந்த வெளிநாட்டுப் பறவையாகவே மக்களுக்குத் தெரிந்தார். கேராளாவின் காங்கிரஸ்காரகளுக்கு கூட அவர் அவ்வப்போது கதராடை அணிகிற அந்நிய நாட்டு தூதராகவே தோன்றினார்,

என்றாலும் அவரது அறிவு ஜீவி இமேஜும் பெரிய இடங்களில் வேலை பார்த்தவர் என்ற பெருமையும் பத்ரிகையாளர்கள் படித்தவர்கள் மட்டத்தில் அங்கீகரிக்கப் பட்டது. டுவிட்டரில் அவரை பின்தொடர்பவர்கள் அதிகரித்தனர். இனி வருகிற இந்திய அரசியலுக்கு தரூர் தேவைப்படலாம் என்ற எண்ணம் உருவாகி வந்தது. தரூர், வண்ணக் கோடுகள் கொண்ட கதர் துண்டை கழுத்தில் போட்டுக் கொண்டு இந்திய அரசியலில் ஞானஸ்நானம் பெற்றுக் கொண்டார்.

அமெரிக்காவின் பக்கத்துவீட்டுக்காரராக அவரை ஒருவாறு அந்நியப் பார்வை பார்த்து வந்த முஸ்லிம்கள் கூட கடந்த ஆண்டின் ஹஜ் ஏர்பாடுக்ளின் போது சசித்ரூர் காட்டிய வெளிப்படையான செயல்பாடுகளால் மகிழ்ச்சியுற்றிருந்தனர்.

இந்திய மக்களின் இரத்தில் கலந்த கிரிக்கெட் ரசனையை சூதாட்டக்களமாக்கிய ஐ பி எல் கிரிக்கெட்டில் கொச்சி அணியின் வடிவில் வந்த பந்து இந்த கொச்சு சேட்டனின் விக்கெட்டை வீழ்த்தியது.

“இந்தியன் பிரீமியர் லீக்” ஐ பி எல் என்பது இந்தியாவின் கருப்புப் பணத்த காவல் காக்கிற பூதங்களான சாராய சாம்ராட்டுகளும், நிழலான வருமானத்தில் கொழிக்கிற தொழிலதிபர்களும் நடிகர் நடிகைகளும் அரசியல் வாதிகளும் சேர்ந்து நடத்துகிற சூதாட்டக் கிளப்பாகும். நூற்றூக் க்ணக்கான நவீன “தாவூத் இபுறாகீம்”களின் கூட்டுக் கொள்ளை இது என்பது இநிதியாவின் அனைத்து அரசிய்ல வாதிகளுக்கும் தெரியும். என்னும் “முதலாளி”களின் அரசுகளாக் நடந்து கொள்ள வேண்டிய நிர்பந்த்தில் இருக்கிற இந்திய அரசு மாநில அரசுகளே எந்த அக்கிரமத்தையும் கண்டு கொள்ளவிலை.

ஐ பி எல் கிரிக்கெட் போட்டிக்கு புதிதாக கொச்சி அணி தேர்வு செய்யப்பட்ட போது கருப்புபண் பூதங்களுக்கிடையேயான பூசல் வெளிப்பட்டது.

ஒரு புதிய அணியை உருவாக்க ஐ பி எல் திட்டமிட்டது அதை விலைக்கு வாங்கும் போட்டியில் அகமதாபாத்தை தலைமையிடமாக கொண்ட பண முதலைகளும் துபாயை மையகமாக கொண்ட பண முதலைகளும் போட்டியிட்டன. இதில் கொச்சி அணியை உருவக்க நினைத்த Rendezvous Sports World நிறுவனம் அதற்காக சசி தரூரின் உதவியை நாடியது. சசி தரூர் தனது தோழி சுனந்தா மூலம் 70 கோடி ரூபாயை அவர்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்தார். போட்டியில் கொச்சி அணியின் உரிமையாளர்கள் வெற்றி பெற்றனர். சுனந்தாவுக்கு அதற்குரிய பங்கு கொடுக்கப் பட்டது.

இந்தப் போட்டியில் நடுநிலை வகிக்க வேண்டிய ஐ.பி.எல்லிம் சேர்மன் லலித் மோடி அகமதாபாத் பண முதலைகளுக்குச் சாதகமாக இருந்தார். போட்டியில் அவர்கள் தோற்ற போது கொச்சி அணியின் பின்னணி பற்றி அவர் நோண்ட ஆரம்பித்தார். அந்தச் சந்தர்ப்பத்தில் தான் சசி தரூர் அவருடன் தொடர்பு கொண்டு கொச்சி அணியின் உரிமையாளர்கள் விசயத்தை தோண்டித் துருவ வேண்டாம் என்று கேட்டுக்(?) கொண்டார். குறிப்பாக சுனந்தா விசயத்தை ஆராய்ந்து கொண்டிருக்க வேண்டாம் என்று தொலை பேசியில் கூறினார். இந்தத் தொலை பேசி உரையாடலை மோடி மீடியாக்களுக்குத் தெரிவிக்க மீடியாக்கள் ச்சித்ரூரையும் சுனந்தாவையும் சல்லடையாக அலசின.

சசி தரூரின் ஆல்பம் தூசி தட்டி எடுக்கப் பட்டது. சமூக நிகழ்ச்சிகள் பலவ்ற்றிலும் சுனந்தா சசியுடன் அருக்கருகே மிக ச்கஜமாக நின்று கொண்ட்ருந்த புகைப்படங்கள் கிடைத்தன. சுனந்தா தனது நாற்பது வயதிலும் கவர்ச்சியாக இருந்தார். மீடியாக்களுக்கு இது போத்தா?

திலோத்தமா முகர்ஜி’யுடனான தனது முதல் திருமணத்தை முறித்துக் கொண்டு கிறிஸ்டினா ஜைல்ஸ்’ என்ற பெண்ணை 2007 ல் இரண்டாவதாக திருமணம் செய்து அவரிடமிருந்து விலகி வாழ்ந்து வருகிற சசி தரூருடன் சுனந்தாவை ஒரு ரக்சிய காதலி ரேஞ்சுக்கு மீடியாக்கள் இணைத்துப் பேசத் தொடங்கின. தனது தோழிக்காக மத்திய வெளிய்றவுத்துறை இணை அமைச்சர் தனது பதவியை துஷ் பிரயோகம் செய்துவிட்டார் எனறு பொரிந்து தள்ளின.

ஐ பி எல் கிரிக்கெட்டின் விஷேசம் என்னவென்றால் “அழகிகளின் ஆட்டம்” என்றார்கள். (நான் ஐ பி. எல் பார்ப்பதில்லை. ஸ்கோர் கேட்பதில்லை. அதுபற்றிய செய்தியையும் படிப்பதில்லை) அரங்கிற்குள் அழகிகள் எப்படி ஆடுகிறார்களோ தெரியாது அரங்கிறகு வெளியே ஆட்டுவிக்கிற அழகிகள் ந்ன்றாகவே விளையாடுகிறார்கள் என்பது மட்டும் இப்போது நன்றாகப் புரிகிறது.

ஐ,பி எல் கமிஷனர் லலித் மோடி, சசி த்ரூரை தொலை பேசியில் தொடர்பு கொண்டு தனக்கு ‘தற்போது’“வேண்டாத’ஒரு வெளிநாட்டு அழகி இந்தியாவில் அதிக நாள் தங்குவதற்கு அனுமதிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். தரூர் அதை பொருட்படுத்தவில்லை. அந்த அழகிக்கு விசா நீட்டிப்பு கொடுத்ததார். அதனால் கோபமடைந்த மோடி. தனக்கு “வேண்டப்பட்ட” ஒரு அழகிக்காக தரூர் அவரிடம் பேசி”யதை மீடியாக்களுக்கு வெளிப்படுத்தினார் என்று கூறும் செய்தியாளர்கள் “எப்படியோ ஐ.பி. எலில் வீரர்களின் ஆட்டம் மட்டுமல்ல அழகிகளின் ஆட்டமும் சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது” என்று நகைக்கிறார்கள்.

“சுனந்தா புஷ்கர்” சசி த்ரூரின் தோழி. துபாயின் மிகப் பிரபலமான ஷேக் ஜைத் சாலையில் வசிக்கிற அவர் கனடா பாஸ்போர்ட் வைத்திருக்கிறார்

காஷ்மீர் பள்ளத்தாக்கின் சோபூர் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஒரு இராணுவ அதிகாரியின் மகளான சுனந்தா ஐக்கிய அரபு அமீரகத்தின் அரசு நிறுவனமான Tecom என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் டைரக்டராக இருக்கிறார்

சுனந்தா தனது அதிகாரப் பூர்வப் பணியோடு விளம்பர நிறுவனம், டிராவல்ஸ் ஏஜென்ஸி போன்ற பல நிறுவனங்களை துபாயில் நடத்தி வருகிறார். கனடாவின் தலைநகர் டொரோண்டோவில் ஐ டி நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார் என்றும் செய்திகள் கூறுகின்றன. சசிதரூர் சுனந்தாவை டொரோண்டோ தோழி என்றே பல இடங்களிலும் அறிமுகப் படுத்தியயதாக NDTV கூறியது. ( She hasbeen introduced several times as Tharoor's "friend from Canada".)

சில மாதங்களூ முன் காங்கிரஸின் இளம் அமைச்சரான ஜிதின் பிரசாத்தின் திருமணத்திற்குச் சென்ற சசி தரூர் சிகப்பு சாரி அணிந்த கவர்ச்சிகரமான ஒரு பெண்ணுடன் சென்ற போதே அவரை நோக்கி பல தலைகளும் திரும்பிப்பார்த்தன. யார் இவர் என்று கேட்கவைக்கும் அளவு அழகும் அதே அளவு ஈர்க்கும் திறனும் கொண்டவர் தான் சுனந்தா அதற்க்குப் பிறகு மீடியாக்களால் அதிகம் கவனிக்கப்படுகிற பிரமுகர் ஆனார். சுனந்தாவுடன் நெருக்கமாகவே தரூர் பல நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். மிக இயல்பான ஒரு நட்பாகவே தரூர் அதை வெளிப்படுத்தினார். ஆனால் மீடியாக்கள் விடவில்லை.

சசிதரூரின் வெளியுறவு என்று டைம் ஆப் இந்தியா தலைப்பிட்டு சில செய்திகளை எழுதியது. (Shashi Tharoor's 'external affair' -Times of india)

கனடாவைச் சேர்ந்த தனது இரண்டாவது மனைவியான கிறிஸ்டியானாவையும் தரூர் விவாகரத்துச் செய்துவிட்டதகவும் சுனந்தாவை அவர் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் வேறு சிலர் செய்தியைப் பரப்பினர். அமைச்சரின் உதவியாளர்கள் இச்செய்தியை தொடர்ந்து மறுத்த்னர். சுனந்தாவுக்கு வாலிப வயதில் ஒரு மகன் இருப்பதாகவும் இது போன்ற செய்தியையை பரப்பவேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டனர்.

ஆனால் இந்தியா அரசியலில்மட்டுமல்ல உலக் அரசியலில் கூட உறவு முறை தெளிவில்லாத நிலையில் கவர்ச்சிகரமான் ஒரு பெண்ணுடன் தொடர்ந்து காட்சி தருவது செல்லுபடியாகாது என்பதை உலக அரசியல் படித்த சசிதரூருக்கு புரியாமல் போயவிட்டது. தனது செல்வாக்கை பற்றிய துணிச்சசால் அவர் இதயெல்லாம் பொருட்படுத்த தேவையில்லை என்று கருதியிருக்கலாம். அஞ்சுவதஞ்சாமை மடமை என்பது இப்போது சசி தரூருக்குப் புரிந்திருக்கும்.

இதே அதிகார துஷ் பிரயோகம் சுனந்தாவுக்குப் பதில் வேறு ஒரு ஆண் விச்யத்தில் நடந்திருக்குமானால இவ்வளவு கடும் சர்ச்சைகளை தரூர் சந்திக்க மாட்டார். எப்படியோ தரூரின் வெளியுறவு அவரது வெளியுறவுத்துறைப் பதவியைப் பறித்துக் கொண்டு விட்டது.

கிரிகெட் விளையாட்டில் சுழல் பந்து வீச்சு, பேட்ஸ்மேன்களை நிலை குலைய வைக்கும். ஐ. பி. எல் கிரிக்கெட்டில் ஏற்பாட்டாளர்கள் அணிகளின் உரிமையாளர்கள் பணச்சூழலுக்கு பலியாகி இணையமைச்சர் சசி த்ரூர் இப்போது மன உளைச்சல் சசி தரூராகி இருக்கிறார்.

இப்போது பிரச்சினை தரூரிலிருந்து விலகி ஜரூராக வேறு திசையில் சென்று கொண்டிருக்கிறது. ஐ பி எல் லின் மூச்சுக்காற்றெங்கும் பரவி இருக்கிற முறைகேடுகள் ஒவ்வொன்றாக இப்போது வெளிவரத் தொடங்கியிருக்கிறது இதுவரை நட்ப்பதை எல்லாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு உம்மென்று இருந்து விட்டு மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இப்போதுதான் ஐ பி எல் என்றால் என்ன கேள்விப்படுவர் போல ஐ பி எல் லின் அனைத்து நடவடிக்கைகளும் சோதிக்கப்படும் என்று கூறுயிருக்கிறார்.

அடெங்கொப்புறானுகளே! இத்தனை நாளா என்னவெல்லாமோ நடக்குது நாட்டிலே! கோடியாய் கள்ளப் பணம் புரளுது விளையாட்டிலே! உலகமே குலுங்குது அழகிகளின் ஆட்டத்திலே! சூறாவளியே வீசுது “பெட்”டிலே! தமிழ் சினாமாவில் கடைசியில் வருகிற இன்ஸ்பெக்டர் போல் தப்பாக துப்பாக்கி சுட்டுக் கொண்டு வருகிறார் பிரணாப்ஜி!

விளயாட்டின் மீதும் நாட்டின் பொருளாதாரத்தின் மீதும் உண்மையான அக்கறை இருக்குமானால் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளுக்கு அரசு உடனே தடைவிதிக்க வெண்டும்

நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சிகள் வைத்த முக்கிய கோரிக்கையே இந்த விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்பது தான். கம்யூனிஸ்ட் கட்சியின் குருதாஸ் குப்தாவும், லல்லுப் பிரசாத யாதவும் முலாயம் சிங்க் யாதவும் மிக அக்கறையோடும் ஆவேசத் தோடும் நாடாளுமன்றத்தில் இந்தப் பிரச்சினையை எடுத்து வைத்தனர். மக்களை ஏமாற்றத் தெரிந்த காங்கிரஸ் கட்சி மக்கள்வையயும் ஏமாற்றியது. முறைகேடுகள் விசாரிக்கப் படும் என்று சொல்லி போக்குக் காட்டி விட்டது.

இதுவிசயத்தில் காங்கிரஸைப் போலவே பாரதீய ஜனதாவும் நாடகமே ஆடியது. சசி தரூர் இராஜினாமா செய்தி வெளியான அந்த நள்ளிரவில் இது உண்மைக்கு கிடைத்த வெற்றி என்று பாரதீய ஜனதா கூறியது. உண்மையில் காங்கிரஸை சங்கடத்தில் சிக்க வைத்த பாரதிய ஜனதாவுக்கு கிடைத்த வெற்றி என்றுதான் இதைச் சொல்லவேண்டும். பாரதீய ஜனதா உண்மைய விரும்பி இருக்குமானால் ஐ பி எல்லை தடை செய்யும்படி தான் சொல்லியிருக்க வேண்டும். ஆனால் பாரதீய ஜனதா ஐ.பி.எல் விசய்த்தில் மூச்சுவிடவில்லை. பாரதீய ஜனதா மட்டுமல்ல பெங்களூருவில் புத்தாண்டுக் கொண்டாட்டங்களை அடித்து நொருக்கிய “இந்துதுதுவ தாலிபான்கள்” ஐ.பி.எல்லின் அழகிகளின் ஆட்டத்திற்கு எந்த வகையிலும் தொல்லை தர வில்லை. முதலாளிகளை பகைத்துக் கொள்ளக் கூடாதல்லவா?

பாவம் சசி த்ரூர்! இந்தப் பிரச்சினையில் முதன்மையாக வெளிப்பட்டது காங்கிரஸ் கட்சிக்குள் அவருக் கேற்பட்ட தனிமையே! மனிதர் தனது சர்வதேச இமேஜுக்கும் சரிந்து வருகிற இமேஜுக்குமிடையே அழகான ஆங்கிலத்தில் நன்றாகவே தடுமாறினார். ஒரு கேரளீயனாக கொச்சி அணி உருவாக உதவியதை தவிர தனக்கு இதில் எந்த லாபமும் இல்லை என்று அழுத்தமாகவே கூறினார். ஆனால் தனது வெளியுறவு நடவடிக்கையில் சுனந்தா புஷ்கருக்கு இடமளித்த விசயத்தில் மனிதர் நாகரிகப் பூச்சுக்கும் கலாச்சார வீச்சுக்குமிடையே வழி புரியாமல் தள்ளாடினார்.

இந்திய அரசியலில் திடீர்ப் பிரவேசங்களும் திடீர் வனவாசங்களும் ச்கஜம் தான் என்றாலும் உள்ளிருந்து காலை வாரிவிடும் காங்கிரஸ் கட்சியின் குணமும், பிர்ச்சினைகளை எதிர்கொள்ளத் திராணியற்ற அதன் இயல்பும், அதற்காக தங்களவர்களையே காவு கொடுத்துவிடும் அதன் உயர்தரப்பண்பும் சசி தரூருக்குப் புதிய பாடங்களை கற்றுத்த தந்திருக்கும்.

ஆனால் அவருக்கு ஏற்பட்ட பாதிப்பை இந்தியாவின் ஜனநாயக அமைப்புக்கு ஏற்பட்ட பாதிப்புத்தான் பெரியது என்பதை இந்தியப் பொது ஜனத்திற்குப் புரிய வேண்டும். .

எதிர்க்க்ட்சிகளின் நாடாளுமன்ற ஆர்ப்பாட்டங்களையும், மீடியாக்களின் மிரட்டல்களையும் எதிர்கொள்ளும் திராணி சோனியாவின் சகாக்களுக்கு இல்லை என்பதுதான் இந்தப் பிரச்சினையில் இரண்டாவதாக வெளிப்பட்ட உண்மை.

அமைச்சரவை செல்வாக்கு துஷ்பிரயோகம் செய்யப்பட்டதை கண்டு துடிதுடித்துப் போய்விட்டது போல நடிக்கிற காங்கிரஸ் கட்சி இந்தியாவின் மிக முக்கியமான ஒரு துறையின் பொறுப்புக்கு அது நியமித்திருந்த ஒருவரை இவ்வளவு விரைவாக வீட்டுக்கு அனுப்பி விட்டதில் தனது செல்வாக்கு அடிவாங்குவதை யோசித்துப் பார்க்கவில்லை.

திடீரென் அரசியலுக்கு வரும் ஒருவர் உடனடியாக மத்திய வெளியுறவுத்துறையின் இணையமைச்சராகிறார், தொடர்ந்து அவர் மீடியாக்களில் வெளியான ஒரு குற்றச் சாட்டில் இராஜினாமா செய்யும்படி நிர்பந்திக்க்படிகிறார் என்பது இந்திய ஜனநயகத்திற்கு எந்த அளவு வலுவூட்டக் கூடியது என்பதை காங்கிரஸ் கட்சி யோசிக்கவே இல்லை.

“தரூர் மீதான குற்றச் சாட்டு குறித்து விசாரிக்கப் படும், விசாரணை முடியும் வரை தரூர் இலாகா இல்லாத அமைச்சராக இருப்பார் என்றோ, அல்லது விசாரனைக்குப்பின் தரூர் மீது குற்றம் இல்லை என்றால் அவர் மீண்டும் அமைச்சராக நியமிக்கப்படுவார் என்றோ காங்கிரஸ் கூறியிருக்குமென்றால் அதுவே ஒரு வலிமையான அரசாங்கத்தின் அடையாளமாக இருந்திருக்கும்.

கார்கில் போரின் போது நடை பெற்ற சவ்ப் பெட்டி ஊழலில் குற்றம் சாட்டப்பட்ட ஜார்ஜ் பெர்னாண்டஸை காப்பாற்றுவதில் பாரதீய ஜனதா காட்டிய தீவிரம், ஏன் ஸ்பெக்ட்ரம் ஊழலில் குற்றம் சாட்டப்பட்ட மத்திய அமைச்சர் ராஜா வை காப்பற்றுவதில் காங்கிரஸின் கூட்டாளி தி.மு,க காட்டிய் அக்கறை ஆகியவறை எண்ணிப்பார்த்துச் செயலப்ட காங்கிரஸ் தவறிவிட்டது

சசி தரூரை வேகவேகமாக இராஜினாமா செய்ய வைத்த அதே வேகத்தில் அவர் மீது குற்றம் எதுவுமில்லை என்று காங்கிரஸ் கூறியது. இதவிட கேணத்தனமான அரசியல் வேறெதுவும் இருக்க முடியாது. தரூர் மீது குற்றமில்லை என்றால் அவரை இராஜினாமா செய்ய் வைத்தது ஏன்? என்ற அத்வானியின் கேள்விக்கு பதில் சொல்ல காங்கிரஸ் க்டசி கடமைப் பட்டிருக்கிறது. அது அதவனியின் கேள்வி மட்டுமல்ல அரசிய்லின் மீது அக்கறையுள்ள அனைவரின் கேள்வியுமாகும்.

இந்தியாவின் அமெரிக்க விவகார அமைச்சராகவும் அவ்வப் போது பிரதம அமைச்சராகவும் இருக்கிற டாக்டர் மன்மோகன் சிங் விமானத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் சசி தரூர் விச்யத்தில் கருத்துச் சொல்லும் போது “அரசியலில் ஏற்றத்தாழ்வுகள் சகஜமே” என்று சொன்னது காங்கிரஸ் அரசின் அரசியல் பலகீனமே!
எதே ஒரு நிர்பந்த்தத்திற்காக தரூரை நியமித்து விட்டு அவரை வெளியேற்ற எப்போதடா சந்தர்ப்பம் கிடைக்கும் என்று காத்திருந்தது போலத் தான் இருந்தது அவரது அந்தப் பேச்சு.

அமைச்சரகச் செல்வாக்கை முறைகேடாகப் பயன்படுத்துவதென்பது இந்தியாவில் இயல்பான ஒன்று என்பது யாருக்கும் தெரியாததல்ல். புதிதாக வந்த ஒருவரை திடீரென வெளியுறவுத்துறை அமைச்சர் என்னும் அளவுக்கு உயர்த்துவானேன்? அவரை சந்தடி சாக்கில் கவிழ்த்துவிடுவானேன்? என்ற கேள்விக்கு மக்களிடம் பதில் சொல்ல காங்கிரஸ் கட்சியிடம் யொக்கியமான எந்த பதிலும் இல்லை

சசித்ரூரின் விசயத்திற்கு முழுமையாக பொறூப்பேற்க கடமைப் பட்டவர் சோனியா காந்தியே! காரணம் அவரை முன்மொழிந்தவரும் அவர் தான். வழியனுப்பியவரும் அவர் தான்.

ஹெட்லி ஒரு அமெரிக்கப் புதிர்

ஹெட்லி ஒரு அமெரிக்கப் புதிர்

உலகில் அதிகம் ஏமாற்றப் படுவது ஆப்ரிக்கர்களா அல்லது தெற்காசியாவில் வாழும் மக்களா என்று ஒரு போட்டி நடத்தப் பட்டால் அதில் ஆப்ரிக்கர்களை பின்னுக்குத் தள்ளிவிடுகிற வேகத்தோடு ஆசியாவின் அரசியல் விரைந்து கொண்டிருக்கிறது.

சீனா தனக்கே உரிய குயுக்தியோடு தனது சர்வாதிகாரத்தை பாதுகாத்துக்கொண்டு தன் மக்களையும் பாதுகாப்பதில் வெற்றியடைந்து விட்டது. திட்டமிட்டு காய் நகர்த்துதல், அமைதியாகவே காரியம் சாதித்துக் கொள்ளுதல் ஆகிய தன்னுடைய திறமைகள் மூலம் உலகின் அயோக்கிய சிகாமணிகளான வல்லரசுகளை தன் விச்யத்தில் எச்சரிக்கையாக இருக்கப் பழக்கி விட்டது.

இந்தியா பாகிஸ்தான் நாட்டு குடிமக்கள் தான் 21 ம் நூற்றாண்டின் அதிக ஏமாளிகளாக இருக்கப் போகிறார்கள். அதற்கான பெரும் விலையை அவர்கள் தர வேண்டியிருக்கும். தங்களது வலது கையை இடது கை நம்ப முடியாமல் போகிற ஒரு அச்சமூட்டுகிற சூழ்நிலையை அவர்களுக்கு ஏற்படுத்தி அமெரிக்காவைத் தவிர வேறு அபயம் இல்லை என்ற நிர்பந்தத்திற்கு அவர்களை தள்ளிவிட அமெரிக்கா போடும் அற்புதமான திட்டத்தில் முற்றாகவே அவர்கள் விழுந்துவிட்டது அப்பட்டமாகவே தெரிகிறது.

20 ம் நூற்றாண்டின் ஒரு பாதியில் பாகிஸ்தானினியர் மட்டுமே இந்த வலையில் சிக்கி சீரழிந்தனர். 21 ந்ம் நூற்றாண்டு அமரிக்கா வெற்றிகரமாக இந்தியாவை காவு கொள்வதற்கான களமாக அமைந்து விட்டது.

இந்தியாவில் சுயச் சார்பும் சுய கவுரமும் அற்ற அரசுகள் அமையத் தொடங்கிய நரசிம்மராவின் காலத்திலிருந்து அமரிக்காவின் பொம்மலாட்டத்தின் குச்சிககளாகத்தான் இந்தியாவை ஆளும் அரசியல்வாதிகள் இருந்து வருகிறார்கள்

வலது சாரி இந்துத்துவ அரசு அமைந்த போது பக்தி உட்பட் அனைத்து விசய்ங்களிலும் வெளிப்பட்டது போலவே அதனுடைய போலித்தனம் சுதேசி கோட்பாட்டிலும் பிரதிபலித்த்தது.

அதற்கு பிறகு வந்த காங்கிரஸ் அரசுகளும் இந்துத்துவா அலையில் அடித்துச் செல்லப் பட்டுவிடக் கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருந்தத்தில் நாட்டை மொத்தமாகவே வெள்ளை மாளிகையின் கொல்லைப் புறமாக்கிவிட்டன.

பாகிஸ்தானாவது நிறைய பணத்தைப் பெற்றுக்கு கொண்டு பறிபோனது. இந்தியாவோ ஏமாந்து போவதில் கூட ஏமாளியாகவே இருக்கிறது.

ஹெட்லி விவகாரம் அதற்கொரு உதாரணம்.

ஹெட்லி விவகாரத்தை கூர்ந்து கவனிக்கிற யாரும் இதைத்தவிர வேற் எதையும் சொல்ல முடியும் என்று தோன்றவில்லை.

ஹெட்லி ரானா. இப்போது இந்தியா முழுக்க இந்த இரண்டு நபர்களைப் பற்றித்தான் பேச்சு, நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்துவருகிறது இந்த ஹெட்லி - ரானா விவகாரம் தற்போது ஒரு புதிய கோணத்தை தொட்டுள்ளது. அதுவே மர்மக் கதையின் திரில் பாயிண்டாக உருவெடுத்திருக்கிறது.

யார் இந்த ஹெட்லியும் ரானாவும்? இவர்களுடைய பின்னணி என்ன?

டேவிட் கோல்மன் ஹெட்லி என்பவரை அவர் டென்மார்கிலிருந்து திரும்பும் வழியில் அமெரிக்காவின் சிகாகோ நகரில் கடந்த மாதம் அமெரிக்க தீவிரவாதத் தடுப்புப்படை அதிகாரிகள் கைது செய்தனர். இது பற்றிய செய்தி அக்டோபர் 30 ம் தேதி வெளியானது. போலி பாஸ்போர்ட் வைத்திருந்தார் என்பதுதான் அவர்மீது சொல்லப்பட்ட முதல் குற்றச்சாட்டு. உட்கார வைத்து விசாரித்தனர். அப்போது நபிகள் நாயகத்தின் படத்தை வெளியிட்ட டென்மார்க் பத்திரிகை அலுவலகம் மீது தாக்குதல் நடத்துவது மற்றும் காஷ்மீர் விவகாரத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்துகொள்ளும் இந்தியர்கள் மீது தாக்குதல் நடத்துவது உள்ளிட்ட திட்டங்களுடன் ஹெட்லி இருந்தது தெரியவந்ததாக அமெரிக்கா கூறியது. அவர் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் தாஹாவுர் ஹுஸைன் ரானா என்பவரையும் அதிகாரிகள் வளைத்துப் பிடித்தனர் என்று அமெரிக்கா கூறுகிறது ஆனால் ஹெட்லீ பணி செயத்தாக சொல்லப் படும் ஃபர்ஸ்ட் வேல்ட் இமிக்ரேசன் சர்வீஸ் எனப்படும் நிறுவனத்திற்கு அவர் தான் உரிமையாளர் என்ற காரணத்தினால் கைது செய்யப் பட்டுள்ளார்.
அமெரிக்காவின் எப். பி.ஐக்கு செய்றையாக சில அலட்டல்கள் உண்டு. வாக்கிங்க் போய் கொண்டிருக்கிற கிழவிகளை கீழே தள்ளி விட்டு, அவர்களது முகத்துக்கு நேரே மிஷின் கன்னையும் ஐடி கார்டையும் காட்டி எப்பிஐ என்று கத்துவது அமெரிக்க திரைப்படங்கள் எப் பி ஐ பற்றி சித்தரிக்கும் பிம்பம். இதை அமெரிகர்களின் எப்பிஐத் தனம் என்பர்கள். அந்த அந்த பிம்பத்திற்கேற்பவே வளைத்துப் பிடித்தனர் என்ற வார்த்தை சேர்க்கப் பட்டுள்ள்து..
ஹெட்லி அமெரிக்காவைச் சேர்ந்தவர். பாகிஸ்தான் வம்சாவளி. நிஜப்பெயர் தாவூத் ஜிலானி. 2006ல் தன்னுடைய பெயரை டேவிட் கோல்மன் ஹெட்லி என்று மாற்றிக்கொண்டார் என்று அமரிக்கா கூறுகிறது. அவர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள்மீது கொலைவெறித் தாக்குதல்களை நிகழ்த்தத் திட்டமிட்டார் என்பதுதான் அமெரிக்க போலீஸார் சுமத்திய முதல் குற்றச்சாட்டு.

ரானா கனடாவைச் சேர்ந்தவர். பூர்விகம் பாகிஸ்தான். ஃபர்ஸ்ட் வேல்ட் இமிக்ரேசன் சர்வீஸ் என்ற நிறுவனத்தை சிகாகோ மற்றும் டொரண்டோவில் நடத்திவரும் ரானாவுக்கு லஷ்கர் ஏ தொய்பாவுடன் நெருக்கமான தொடர்பு உண்டு என்று அமெரிக்கா கூறுகிறது. சிகாகோ, டொரண்டோ உள்ளிட்ட பல இடங்களில் உணவுப்பொருள் மற்றும் மளிகைப்பொருள் விற்பனை நிறுவனங்களையும் ராணா நடத்திவருகிறார்.
சிகாகோ விமான நிலையத்தில் பணியாற்றும் இன்ஸ்பெகடர் ஒருவர் டென்மார்க்கிலிருந்து திரும்பிய ஹெட்லியின் பாஸ்போர்ட்டை பரிசீலித்த போது அடிக்கடி ஐரோப்பாவிற்கு அவர் பயணம் செய்திருப்பது குறித்து கேள்வி எழுப்பியிருக்கிறார். எங்கு பணி செயகிறீர்? என விசாரித்திருக்கிறார். ஹெட்லீஃபர்ஸ்ட் வேல்ட் இமிக்ரேசன் சர்வீஸ் என்ற பெய்ரைச் சொல்லவே அந்த கம்பெனியின் தகவல்களில் ஹெட்லியை பற்றிய விபரங்களை தேடியிருக்கிறார். ஹெட்லிக்கு கம்பெனி வரி கட்டிய விபரம் அதில் இருக்கவில்லை அதனாலேயே அவர் கைது செய்யப் பட்டார் என்று வால் ஸ்ட்ரீட் ஜர்னல் கூறுகிறது.
ராணா ஹெட்லியுடன் சேர்ந்து சதித்திட்டங்கள் பலவற்றுக்குத் திட்டமிட்டா என்கிறது அமரிக்காவின் புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ. இருவருமே பாகிஸ்தானில் இருக்கும் ஹசன் அப்துல் மிலிட்டரி கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள் என்றும் அது கூறுகிறது.

இந்த கைது நடவடிக்கைக்குப் பிறகு அதிர்ச்சியளிக்கும் செய்திகளை அமரிக்கா தொடர்ந்து வெளியிட்டுவருகிறது. டென்மார்க்கின் ஜெலன் போஸ்ட் பத்ரிகை அலுவலகத்தை தாக்குவதற்கு அவர் திட்டமிட்டதாக முதலில் கூறியது. அடுத்ததாக இந்தியாவில் உள்ள அமெரிக்கர்களை கொல்லத்திட்டிருந்ததாகவும் லஷ்கரே தய்யிபா என்ற உளவுத்துறையின் கண்களுக்கும் மட்டுமே தெரிகிற இயக்கத்துக்கு ஆயுதங்களை பெற்றுத்தந்ததாகவும் கூறியது.

அதற்கடுத்ததாக அதிர்வேட்டுக்களை அமெரிக்கா பற்ற வைக்க ஆரம்பித்தது.

ஹெட்லி மற்றும் ரானா இருவருக்கும் மும்பை தாக்குதலை நடத்திய தீவிரவாதிகள் மற்றும் அவர்களை இயக்கிய நபர்களுடன் நெருக்கமான தொடர்பு இருந்திருக்கிறது என்று கூறியது.

அதற்கடுத்த சில நாட்களில் இந்தியாவின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களையும் அணு உலைகள் இருக்கும் இடங்களையும் கொசுறாக சோமநாதர் ஆலயத்தையும் அவர்கள் தாக்க திட்டமிட்டிருந்ததாக அது கூறியது.
அவர்கள் காலம் முழுக்க அமெரிக்காவில் வாழ்ந்திருக்க அவரகளது பாட்டன் முப்பாட்டன் பாகிஸ்தானியராக இருந்ததை சொல்லி “பாகிஸ்தான்ய பயங்கரவாதப் பேயை” காட்டி அமெரிக்கா பயமுறுத்தியது.
அமெரிக்கா முதலாளி எந்தக் கம்பத்திற்கு அருகிலாவது சென்று காலைத் தூக்கினால் இந்திய அரசியல் தலைமை ஒன்றுக்குப் போகும் என்ற தற்போதைய துரதிஷ்டமான சூழலில் இந்திய அரசியல் தலைமைக்கும் புலனாய்வு அமைப்புக்களுக்கும் ஒரு புதிய சுறுசுறுப்பு வந்தது. அமெரிக்கா டிக்டேட் செய்யும் வார்த்தைகளை குறிப்பெடுத்து பத்ரிகைகளுக்கு கொடுக்கத் தொடங்கி விட்டனர்.

மும்பைத் தாக்குதலில் குண்டு வைக்க வேண்டிய இடங்கள் பற்றி தகவல் கொடுத்தது தொடர்பான 10 வழக்குகள் உட்பட ஹெட்லி மீது மொத்தம் 12 வழக்குகளில் எஃப்.பி.ஐ. குற்றம்சாற்றியுள்ளது. ஹெட்லி மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன
பத்ரிகைகளில்ம் தொலக்காட்சி சானல்களில் ஹெட்லியால் ஏற்பட்டுள்ள அச்சுறூத்தல் குறித்த செய்திகள் சகட்டு மேனிக்கு வந்து கொண்டிருந்தன.

ஆரம்ப கட்டத்தில் அமரிக்கா நடத்த அலம்பல்களுக்குப் பிறகு உண்மை கொஞ்ச்மாக தலை காட்டத் தொடங்கியது.
முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல அமரிக்கா செய்துள்ள முயற்சிகள் அமபல்மாகி வருகின்ற்ன.

நியூயார்க் இரட்டை கோபுரத் தகர்ப்பிற்குப் பிறகு அமரிக்கா அதன் பாதுகாப்பு விசயத்தில் அடித்து வருகிர கொட்டம் உலக்றிந்த ஒன்று. இந்தியாவின் ஒரு முன்னாள் ஜனாபதியை அது வும் ஒரு விஞ்ஞானியை அது சூவை கழட்டச் சொல்கிறது. பல கோடி மக்களிடம் புகழ் பெற்ற ஒரு நடிகனிடம் விசாரனை என்ற பெய்ரில் ஏர்போர்ட்டில் டார்ச்சர் கொடுக்கிறது. கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு தேடிப்பார்த்து விசா வழங்கி விட்டு பிறகு அமெரிக்கா நடத்துகிற இந்த கொட்டங்களை உலகம் மௌனமாகவே வேடிக்கைப் பார்த்து வருகிறது என்றாலும்.

இவ்வளவு பாதுகாப்பு கெடுபிடிகள் நிறைந்த நாட்டுக் குள்ளிருந்து கொண்டு ஒரு “பயங்கரவாதி”சுதந்திரமாக சுற்றி வர முடிந்திருக்கிறது என்ற காட்தில் பூ சுற்றும் வேலை எத்தனை நாட்களுக்குத் தான் நிலைக்கும்?

அமரிக்காவின் நாடகத்தை மூடியிருந்த திரை விலகத் தொடங்கிய போது வேசம் கலைந்த பல புதிர்கள் வெளிப்பட்டன.

ஹெட்லி சிஐஏவுக்கு ஏஜென்ட்டாக இருந்ததாகவும் முதலில் தகவல்கள் வெளியாயின்
சி.ஐ.ஏ.வின் மறைமுக ஆதரவு இருந்ததால் தான் 2009 மார்ச் மாதத்தில் ஹெட்லி இந்தியா, பாகிஸ்தானில் தடையில்லாமல் உலவ முடிந்தது என்றும் கூறப்படுகிறது.

இந்தியாவில் ஹெட்லியின் நட்வடிக்கைகள் பற்றிய செய்திகள் ஆச்சரியப் பட்த்தக்க இருக்கிற அதே நேரத்தில் மும்பை தீவிர்வாதத் தாக்குதல்களை மர்ம்மான முடிச்சுகளுக்குள் கொண்டு செல்கிறது என்பதே உண்மை.
தற்போதிறுக்கிற் இஸ்லாமிய எதிர்ப்பு அல்லது பாகிஸ்தான் எதிர்ப்பு என்றை ஒற்றை அளவு கோள்களை வைத்துக் கொண்டே அரசு முதல் மீடியாக்கள் வரை அனைவரும் இந்த விசயத்தை அணுகு கின்றனர்.
ஹெட்லி பற்றிய தகவல் இஸ்லாமிய தீவிரவாதம் அல்லது ஜிஹாதிஸ்ட் என்ற சொல்லாடல்களுடன் பல் வகைகளிலிம் பொறுந்திப் போகவில்லை அவர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளவே இல்லை.
ஹெட்லீ மும்பை திரைப் படத் துறையின் நடிகைகள் பல்ருடன் தொடர்பு கொண்டிருந்ததா இந்திய மத்தியப் புலனாய்வுத்துறை கூறியது. பாலிவுட்டைச் சேர்ந்த 15 பேருடன் அவருக்கு தொடர்பு இருந்ததாக அது கூறியது.
ஜிஹாதிஸ்ட்களின் இமேஜிற்கு சற்றும் பொருந்ததாத இந்த நடவ்டிக்கை வெளியான பிறகும் அவரை பாகிஸ்தானிய ஜிஹாதிஸ்ட் என்று ஊடகங்கள் பித்ற்றிக் கொண்டிருக்கின்றன.
தனது இந்தியப் பயணத்தின் போது ஹெட்லீ யாரையெல்லாம் சந்தித்தார் என்பது குறித்து விசாரித்து வருகிற தேசிய புலணாய்வுக் கழகம் அப்போது அவர் ஒஷோ ஆசிரமத்திற்கு சென்றதாக கூறியது.

2008ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஒரு நாளும் 2009ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஒரு நாளும் ஹெட்லீ புனேயில் தங்கியிருந்ததாகவும், அப்போது ஓஷோ ஆசிரமத்திற்கு அவர் சென்று வந்ததாகவும் காவல் துறை உயர் அதிகாரி ரவீந்திரா செங்கோன்கர் கூறியுள்ளார்.ஆசிரமத்தில் உள்ள கேரேகான் பூங்காவில் தியானம் செய்வதற்காக ஆசிரமத்திற்கு ஹெட்லீ வந்ததாக ஆசிரம அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதுவும் ஜிஹாதிஸ்ட் மெண்டாலிட்டியுடன் ஒத்துப் போகக் கூடியதல்ல என்றாலும் இன்றைய காலச் சூழல் எந்த அக்கிரம்த்தையும் இஸ்லாமிய தீவிரவாதம் அடிப்படை வாதத்துடன் இனைத்து விடுவது இலேசாக மக்களை ஏமாற்றி விடுவதற்கு போதுமாக இருக்கிறது. இந்த கோணத்தை தீவிரப் படுத்துவதற்காக சோமநாதர் ஆலயத்தை தாக்குவதற்கு ஹெட்லீ திட்ட்மிட்டிருந்த்ததாக அமெரிக்கா கூறியதை விவஸ்தை கெட்ட தொலக்காட்சியான சன் குழுமச் செய்திகள் தொடர்ந்து ஒலொ பரப்பிக் கொண்டிருந்தது.

நல்ல வேளையாக ஹெட்லீ எந்தப் பள்ளிவாசலுக்கும் தர்காவுக்கும் போனதாக தகவல வரவில்லை. வ்ந்திருந்தால் பட்லீ ஹவுஸ் போல பல தேச்பக்திமிக் என்கவுண்டர்கள் அரங்கேறியிருக்கக் கூடும்.
ஹெட்லிக்கும் சி.ஐ.ஏ.க்கும் உள்ள தொடர்பு குறித்து தகவல்கள் ஒரு பெரும் கேள்வியாக உருவெடுத்திருக்கிற நிலையி்ல் இதில் தொடர்புடைய எந்த நபரும் சி.ஐ.ஏ.வுடன் எந்த காலத்திலும் பணியாற்றவில்லை என சி.ஐ.ஏ செய்தித் தொடர்பாளர் மேரி இ ஹார்ஃப் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.

அப்பன் குதிருக்குள் இல்லை என்பது போலத் தான் இதுவும். சிஐஆவில் ஒருவர் இருக்கிறார் என்பது எந்த வகையிலு அதிகாரப் பூரவ்மாக ஊர்ஜிதப் படுத்த முடிந்த செய்தி அல்லவே!

இந்த விவகாரத்தில் பிரபல இந்திபட டைரக்டர் மகேஷ்பட் மகன் ராகுல்பட்டிடம் நடத்திய விசாரணையில், 'ஹெட்லி அமெரிக்க சி.ஐ.ஏ.வில் வேலை பார்ப்பதாக நினைத்துத் தான் நான் அவரிடம் பழகினேன். அமெரிக்க ராணுவ நடவடிக்கைகளின் வரலாறு அத்தனையும் ஹெட்லிக்கு அத்துபடி. அவர் வைத்திருந்த புத்தகங்கள் மற்றும் பல ஆவணங்கள் எல்லாம் எனக்கு அவர் மீது அப்படித்தான் நம்பிக்கையை ஏற்படுத்தியது' எனக் கூறியிருப்பதும் கவனிக்கத்தக்கதாகும்.
சிஐ ஏ இல்லை என்றால் அவர் வேறு யாருக்காக வேலை செய்தார் என்ற கேள்விக்கு இன்னும் பதில் வரவில்லை. இல்லை என்றால் இவ்வளவு செல்வாக்கோடு எப்படி அவர் உலகம் முழுவதும் சர்வசாதாரணமாக சென்று வர முடிந்தது?

ஹெட்லி, அமெரிக்க போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் ரகசிய ஏஜென்ட்டாக பணியாற்றிய புதிய தகவலும் சமீபத்தில் வெளியாகியது.

அப்பட்யானால் போதைக்கும்பல்களின் போட்டியால்தான் மும்பை குண்டுவெடிப்புக்கள் நடந்ததா? என்ற கேள்வி எழுவதை செய்தி ஊடகங்கள் எதுவும் இதுவரை அனுமதிக்கவே இல்லை. அமரிக்கா சொல்லித்தருவதையே பேச் வேண்டிய அடிமை மனப்பான்மைக்கு அவை ஆட்பட்டு விட்டன என்பதையே அது பிரதிபலித்தது.

என்றாலும் ஹெட்லி மூலமாக இந்த சதித் திட்டம் குறித்து சி.ஐ.ஏ.வுக்கு முன்கூட்டியே தகவல் தெரிந்திருக்கும் என தற்போது சந்தேகம் இப்போது வலுப் பெற்றுவருகிறது.

ஹெட்லீ மற்ற்ம் ராணா ஆகியோரைப் பற்றிய தகவல்களுடன் அமெரிக்க புலனாய்வுத் துறையினர் இந்தியா வந்திருந்தனர். அவர்களுக்கு இந்தியத் தரப்பில் அனைத்து வகையான ஒத்துழைப்பும் அழைக்கப்படும் என வெளியுறவு அமைச்சர் எஸ்எம் கிருஷ்ணா தெரிவித்தார். ஆனால் மும்பை தீவிரவாத தாக்குதலில் ஹெட்லிக்கு தொடர்பு இருப்பதாக செய்தி வெளியானதும் அவரிடம் விசாரணை நடத்த இந்த அதிகாரிகள் அமெரிக்கவிடம் அனுமதி கேட்டபோது ச்ப்பையான சட்ட விதிகளை சொல்லி அமெரிக்கா அதை மறுத்து விட்டது. தாங்கள் விசாரிக்காத பட்சத்தில் மும்பை தாக்குதல்குறித்த முழுவிபரமும் தெளிவாகாமல் போகக் கூடும் என்று இந்திய புலனாய்வுத்துறையின் அச்சத்திற்கு இது எந்த உருப்படியான பதிலையும் அமெரிக்கா தரவில்லை.
அமெரிக்காவில் உள்ள ஒரு கைதி பார்க்க நம்மவர்கள் அமெரிக்காக்கர்களின் காலட்யில் காத்துக் கிடக்க வேண்டியிருக்கிறது. ஆனால் அமெரிக்காக்காரர்கள் தங்களது சொந்த வீடு கணக்காக அரசு ஒத்துழைப்புடன் இங்கு இயங்குகிறார்கள். என்ன இறையாண்மை உடைய தேசம் இது? என்ற அதிருப்தி பரவலாக நாட்டு மக்களிடையே எழுந்துள்ளது.

தற்போது ஹெட்லியை இந்தியாவிடம் ஒப்படைப்பதற்கு அமெரிக்கா தயங்குவதும் இந்த காரணத்திற்காகத் தான் என சுட்டிக் காட்டப்படுகிறது. ஹெட்லி இந்திய அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டால், முழு விவரங்களும் அம்பலமாகி விடும். அப்போது அமெரிக்காவுக்கு ஏற்படக் கூடிய தர்மசங்கடத்தை தவிர்க்கவே இந்த இழுத்தடிப்பு என்று குற்றம் சாட்டப்படுவதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளத் தக்கதல்ல.
இதற்கிடையே, ஹெட்லி விசயத்தில் அமெரிக்கா வழங்கி வரும் ஒத்துழைப்பு குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

ஹெட்லி. கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் அமெரிக்காகவுக்காக உளவு பார்த்துள்ளார். மேலும் இந்தியாவுக்கு வர அவர் எடுத்த விசா குறித்த ஆவணங்களும் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகின்றன. இதுகுறித்தும், இந்த வழக்கில் அமெரிக்கா அளித்து வரும் ஒத்துழைப்பு குறித்தும் மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டியது கடமையாகும் என்றும் சமாஜ்வாடி, இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கைவைத்துள்ளன. இந்த பிரச்சினையில் நல்ல பிள்ளை போல பாஜாகவும் எதிர்கட்சிகளோடி இணைந்து கோரிக்கை வைத்துள்ளது. இன்றைய சூழ்நிலையில் பாரதீய ஜனதாவின் சார்பார்களான் சுப்ரமணியசாமி போன்ற பலர் மீது சிஐஏவுக்கு உளவு பார்ப்பதாக குற்றச் சாட்டு இருக்கையில் பாரதீய ஜனதாவின் இந்த கோலம் கேலியாக பார்க்கப் படுகிறது.
அக்டோபர் 3ஆம் தேதி எஃப்.பி.ஐ. அமைப்பின் பயங்கரவாத ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட டேவிட் கோல்மென் ஹெட்லி, சிகாகோ ஃபெடரல் நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்புடன் ஆஜர்படுத்தப்பட்டார்.

ஹெட்லி மீதான வழக்குகள் குறித்த விசாரணை 5 நிமிடங்கள் நடந்ததாகவும், அப்போது மும்பைத் தாக்குதல் மற்றும் டென்மார்க் பத்திரிகை மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டது ஆகிய குற்றச்சாற்றுகளில் தனக்குத் தொடர்பில்லை என நீதிபதியிடம் அவர் கூறியதாகவும் ஹெட்லியின் வழக்கறிஞர் ஜான் தீஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஹெட்லி கைது வழக்கு விசாரணை திட்டமிட்டபடி நடக்காது என்று சிகாகோ நீதிமன்றம் தெரிவித்தது. விசாரணை டிசம்பர் 4-ம் தேதி நடைபெறவிருந்தது. இந்நிலையில் இதை ரத்து செய்த நீதிபதி, வழக்கு விசாரணையை காலவரையின்றி ஒத்திவைப்பதாகவும் கூறியுள்ளார்
.
ஹெட்லி மீதான வழக்கு மீண்டும் எப்போது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றோ, அந்த வழக்கு தொடர்பான வேறு எவ்விதத் தகவலையுமோ நீதிபதி தெரிவிக்கவில்லை என்று அரசு தரப்பு வழக்கறிஞர் அலுவலகம் கூறியது.

அதேசமயம், ஹெட்லியின் கூட்டாளியான தஹவூர் ஹுசைன் ராணா கைது தொடர்பான வழக்கு விசாரணை திட்டமிட்டபடி டிசம்பர் 2-ம் தேதி நடைபெறும் என்றும் அந்த அலுவலகம் கூறியுள்ளது.

அமெரிக்க உளவுத்துறை மர்மங்கள் நிறைந்தது. பல்வேறுபட்ட கீழ்த்தரமான அரசியல் நடவடிக்கைகளின் கறை படிந்தது. சூழ்ச்சித்திறன் என்ற போர்வையில் ஏராளமான சூதுவாதுகள் செய்யக் கூடியது.

அந்த மர்மங்களின் நிழலில் ஹெட்லி விவகாரம் ஓளிந்துகிடக்கிறது. அமெரிக்க உளவுத்துறைகளோடு ச்மபந்தப்பட்டிருப்பவர் என்று சந்தேகத்திற்கு ஆளான ஒருவர் மும்பை தாக்குதலில் ஈடுபட்டிருக்கிறார் என்றால் யாருக்காக எதற்காக இத்தாக்குதல்கள் நடைபெறுகின்றன என்பதை இன்னும் சற்று ஆழமாக தேடிப்பார்க்க வேண்டிய கடமை இந்திய மக்களுடையது.

பாகிஸ்தானோடு பகை, இஸ்லாமோடு அதிருப்தி, முஸ்லிம்களோடு வெறுப்பு ஆகிய அம்சங்களை மட்டுமே வைத்துக் கொண்டு அனைத்து விசயங்களையும் அனுகுவது புத்திசாலித்தனமல்ல.

துரதிஷ்ட வசமாக இந்தியாவை ஆளும் சக்திகளும் ஊடகங்களில் வாழும் சாத்தான்களும் அமெரிக்காவின் மாந்திரீகத்தையே வேதமாக ஓதிக்கொண்டிருக்கின்றன. ஹிந்து பத்ரிகை NDTV ஆகிய ஓரிரு ஊடகங்கள் பத்ரிகையாளனின் பார்வையை தக்க வைத்துக் கொண்டுள்ளன. அவை இரண்டும் ஹெட்லீ விசயத்தில் மறைந்துள்ள இன்னும் பல புதிர்களை அம்பலப் படுத்தி வருகின்றன்.

ஹெட்லி ஒர் அமெரிக்கப் புதிர், குளம்பிய குட்டையில் மீன் பிடிக்க அமெரிக்க போட்டுள்ள புழு. இந்திய மக்கள் அதில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க வேண்டும்